மத்திய பொது பட்ஜெட்டில் வடக்கு ரயில்வேக்கு ரூ.13,200 கோடியும், தெற்கு ரயில்வேக்கு ரூ.59 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி., மக்களவையில் கேள்வி எழுப்பியது கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது இது பொய் என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
பட்ஜெட் மீதான விவாதத்தில் தூத்துக்குடி தொகுதியின் எம்.பி கனிமொழி மக்களவையில் பேசினார். அப்போது, "ரயில்வேத் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுக்கவில்லை. ஆனால், இன்னும் நிறைய செய்திருக்க வேண்டும். பட்ஜெட்டில் 2022-23-ஆம் ஆண்டில் தெற்கு ரயில்வேக்கு வெறும் ரூ.59 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் வட இந்திய ரயில்வேக்களுக்கு ரூ 13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பட்ஜெட்டில் புதிய ரயில் பாதைகளுக்காக நிதி ஒதுக்கீடுகள் தெற்கு ரயில்வேயைவிட வடக்கு ரயில்வேக்களுக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் தெற்கு ரயில்வேயில் ரூ.308 கோடி மட்டுமே புதிய ரயில் பாதை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒன்றிய ரயில்வே துறை நிதி ஒதுக்கீட்டில், தெற்குப் பகுதிக்கும், வடக்குப் பகுதிக்கும் காட்டும் பாரபட்சத்தை சுட்டிக்காட்டி, ரயில்வே பட்ஜெட்டில் இருக்கும் குறைகள் குறித்தும், ரயில்வே துறையின் செயல்பாடுகள் குறித்தும் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய போது (1/2) pic.twitter.com/yAp68sZT7k
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 15, 2022
ஆனால், வட இந்திய ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 31,008 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே 17 கி.மீ. புதிய ரயில்வே பாதை திட்டத்துக்கு 59 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை-போடிநாயக்கனூர் இரட்டைப்பாதை திட்டத்துக்கு ரூ.125 கோடி, திருச்சிராப்பள்ளி-காரைக்கால்-வேளாங்கண்ணி முதல் திருத்துறைப்பூண்டி வரையிலான அகலப்பாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ. 121 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய 13 திட்டங்கள்: மக்கள் நீதி மய்யம் பட்டியல்
ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன். வடக்கு ரயில்வேக்கு வழங்கப்படுவதற்கும், தெற்கு ரயில்வேக்கு வழங்கப்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் பார்க்கும்போது எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. நீங்கள் அனைவருக்குமான இந்தியா, ஒரே நாடு என்று பேசுகிறீர்கள். ரயில்வேயும் ஒரே நாடு போலத்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.” என்று பேசியுள்ளார்.
கனிமொழி இதுகுறித்து ட்விட்டரில் வீடியோவுடன் பதிவிட்டிருந்தார். தற்போது இவரின் இந்த பேச்சு பலரால் பகிரப்பட்டு வருகிறது. பலரும் இந்த பதிவை ரீ-ட்வீட் செய்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Shocked at the brazen lie peddled inside the Parliament by DMK MP Kanimozhi.
Actual Allotments:
AP: ₹7,032 Crores
TN: ₹3,865 Crores
Karnataka: ₹6,091 Crores
Telangana: ₹3,048 Crores
Kerala: ₹1,085 CroresRailways divided into multiple zones - not just North and South. https://t.co/DEBMnRz1Rl
— SG Suryah (@SuryahSG) March 16, 2022
இதுஒருபக்கம் இருக்க பாஜகவின் செய்தித்தொடர்பாளர் சூர்யா ட்விட்டரில் கனிமொழி கூறிய தகவல் உண்மை இல்லை என பதிவிட்டுள்ளார். இதனால் யார் சொல்வது பொய் என்ற குழப்பம் ஏற்பட்டது. அதன்பின்னர் தான் , 2022-23-ம் ஆண்டுக்காக ரயில்வே பட்ஜெட்டில் 3,865 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது மொத்த நிதி என்பதும், புதிய வழித்தடங்களுக்கு வெறும் 59 கோடி ரூபாய் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் எதிர்ப்பார்ப்புகள் என்ன? மின்கட்டணம் உயர்த்தப்படுமா?
மத்திய பட்ஜெட் தாக்கலான பிறகு தெற்கு ரயில்வே அதிகாரி ஏ.கே.அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதிலும் அவர், தெற்கு ரயில்வே 2022-23-ம் நிதியாண்டுக்கு தமிழகத்துக்கு 3,865 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், புதிய வழித்தடங்களுக்கு 59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கனிமொழி எம்.பி.,யும் மக்களவையில் புதிய வழித்தடங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறிப்பிட்டு பேசியுள்ளார். அவர் குறிப்பிட்ட தொகையும் சரியானது தான். ஆனால் பாஜக செய்தித்தொடர்பாளர் சூர்யா மொத்த நிதியை குறிப்பிட்டு கனிமொழி பேசியது பொய் என எழுதியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR