வேப்பனப்பள்ளியும், காட்டு யானைப் பிரச்சனையும்.!

Veppanappalli Elephant Issue : கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஒற்றைக் காட்டு யானை உலவுவதால் பொதுமக்கள் அச்சம்  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 12, 2022, 04:20 PM IST
  • வேப்பனப்பள்ளியில் காட்டு யானைகள் முகாம்
  • ஒற்றை யானை தொல்லை அதிகரித்துவிட்டதாக புகார்
  • செய்வதறியாது திகைக்கும் வனத்துறை - யானையைக் பிடிக்க தீவிரம்
வேப்பனப்பள்ளியும், காட்டு யானைப் பிரச்சனையும்.! title=

மேற்குத் தொடர்ச்சி மலையொட்டிய கிராமங்களுக்கு வனவிலங்குகள் இரவு நேரங்களில் அடிக்கடி வந்துசெல்வதுண்டு.  அப்படி ஊருக்கு வரும் யானைகள் பயிர்களை சேதப்படுத்திச் செல்வதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. பொதுவாக கும்பலாக வரும் யானைகள் இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்திவிட்டு சென்றுவிடும். ஆனால், காட்டு யானை ஒற்றையாக சுற்றித்திரிந்தால் மிகுந்த ஆபத்தாக பொதுமக்கள் கருதுகின்றனர். ஏனெனில், ஒற்றைக் காட்டு யானை பயிர்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் அவ்வப்போது விலங்குகளையும், மனிதர்களையும் தாக்கிவிட்டுச் செல்கிறது. 

மேலும் படிக்க | மழையில் மஜாவாக விளையாடும் யானைக்குட்டியின் அழகான வீடியோ!

தென்மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையொட்டி கிராமங்களில் அவ்வப்போது கேரளாவில் இருந்து யானைகள் வருகின்றனர். வட தமிழகத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வண்ண வந்தம் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வனப் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக 11 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு அடிகடி ஊருக்குள் புகுந்து வந்தன. இந்த 11  காட்டு யானைகளில் இருந்து ஒரு யானை தனியாகப் பிரிந்து சிகரளப்பள்ளி கிராமத்தில் உலவி வருகிறது. 

அங்குள்ள நாகராஜன் என்பவரது விவசாய தோட்டத்தில் புகுந்த இந்த ஒற்றை யானை, விளைநிலங்களில் இருந்த மாமரம், பயிர்களை சேதப்படுத்திச் சென்றன. இதையடுத்து யானையை கண்ட 10க்கும் மேற்பட்ட மாடுகள் கயிற்றை பிடிங்கிக் கொண்டு ஓடிவிட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், ஒற்றை யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இதே பகுதியில் இரண்டு பேரை ஒற்றை காட்டு யானைத் தாக்கியுள்ளது. தற்போது அதே பகுதியில் நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | விரட்டும் யானைகளை வீடியோ எடுக்கும் மோகம் அதிகரிக்கிறதா ? - உளவியல் பின்னணி என்ன ?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News