50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை..!

ராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரை பகுதியில் 50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டையை பறிமுதல் செய்யப்பட்டது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Apr 21, 2024, 08:32 PM IST
  • ராமநாதபுரத்தில் பரிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்
  • போலீஸார் இருவரிடம் விசாரணை
  • நடந்தது என்ன?
50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை..! title=

ராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரை பகுதியில் 50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டையை பறிமுதல் செய்து, இரட்டையரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையை ஒட்டியுள்ள ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பீடி இலை உள்ளிட்ட போதை, கடல் அட்டை உள்ளிட்ட  பொருள்களும் அதற்கு மாறாக இலங்கையிலிருந்து தங்க கட்டிகள், அபின்,பிரவுன் சுகர், 'ஐஸ்' போதை பொருள் உள்ளிட்டவைகள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன் மற்றும் முகமது நசுருதீன் என்ற இரட்டையர் அப்பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டி தங்களை சமூக சேவகர் என காட்டிக்கொண்டு பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக சொல்லபடுகிறது.

மேலும் படிக்க | பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழக வெற்றி கழகம்!

குறிப்பாக, இவர்கள் இருவர் மீதும் கஞ்சா வழக்கு ஒன்று நிலுவையில் உள்ள நிலையில், அதற்கான பிடிவாரண்ட் வழங்குவதற்காக திருப்புல்லாணி சார்பு ஆய்வாளர் கோட்டைச்சாமி இரட்டையர் வீட்டிற்கு சென்றபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 50 லட்சம் மதிப்பிலான 700 கிலோ கடல் அட்டை மூட்டை மூட்டையாக இருப்பதை பார்த்து அதிர்ந்து போன சார்பு ஆய்வாளர் உடனடியாக இது குறித்து கீழக்கரை சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் வீட்டின் பின்புறமாக மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான சுமார் 700 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | நல்ல விஷயங்கள் பற்றி பேசுவோம்! எடப்பாடி குறித்த கேள்விக்கு டிடிவி தினகரன் பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News