வளசரவாக்கம் மற்றும் சாலிகிராமம் பகுதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய 500க்கும் மேற்பட்டோர் இந்த மருத்துவ முகாம் மூலம் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் திருமதி சுமா ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் இசிஆர் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரமிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த சுகாதார முகாமில், பொது சுகாதாரப் பரிசோதனைகள், சிறப்பு ஆலோசனைகள் மற்றும் அத்தியாவசிய உடல்நலப் பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு இலவச சேவைகள் வழங்கப்பட்டன.
அடித்தட்டு மக்களின் சுகாதார மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த முயற்சி, தரமான சுகாதாரத்தை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. சமூக செயல்பாடுகளுக்கு புகழ்பெற்ற அப்சரா ரெட்டி, தமிழகம் முழுவதும் இதுபோன்ற முயற்சிகளைத் தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஆம்புலன்ஸ் மோதி விபத்து: பைக்கில் வந்த இளைஞர் பரிதாப பலி
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பொருளாதார வளர்ச்சிக்கும், மகிழ்ச்சியை உறுதி செய்வதற்கும் பொது சுகாதாரம் அவசியம் என்றார். பொருளாதார சிக்கல் காரணமாக, வறுமையில் உள்ள மக்கள் தங்கள் உடல்நலனைப் பேன முன்னுரிமை அளிப்பதில்லை என்றும், பொருளாதாரம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றின் இடையேயுள்ள இடைவெளியைக் குறைப்பதற்கும், அனைவருக்கும் சுகாதார சேவை கிடைக்கவும் இது போன்ற நல்ல முயற்சிகளை மேற்கொள்வதாகவும், அப்சரா ரெட்டி கூறினார்.
மேலும் படிக்க | மதுரை அருகே அலங்காநல்லூர் பகுதியில் வீலிங் செய்த இளைஞர்: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ