OPS : அதிமுகவை ஒற்றுமையாக்க அறைகூவல் விடுக்கும் ஓபிஎஸ்! நடக்கப்போவது என்ன?

OPS : முன்னாள் முதலமைச்சர் ஓ.பண்ணீர் செல்வம், அதிமுக மீண்டும் ஒன்றிணைய தனது பதிவின் மூலமாக தூது விட்டிருக்கிறார்.

Written by - Yuvashree | Last Updated : Jun 6, 2024, 10:03 AM IST
OPS : அதிமுகவை ஒற்றுமையாக்க அறைகூவல் விடுக்கும் ஓபிஎஸ்! நடக்கப்போவது என்ன? title=

OPS : முன்னாள் முதலமைச்சர் ஓ.பண்ணீர் செல்வம், அதிமுக மீண்டும் ஒன்றிணைய தனது பதிவின் மூலமாக தூது விட்டிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ஒற்றைக் குச்சியை ஓடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வர வேண்டும் என சசிகலா நேற்று அழைப்பு விடுத்த நிலையில், இன்று ஓபிஎஸ் அழைப்பு. இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும், ஜெயலலிதா ஒப்படைத்து போன ஆட்சியை ஒற்றுமையால் மீட்டெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

படுதோல்வியை சந்தித்த அதிமுக:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. சமீபத்தில் நடைப்பெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், அதிமுக படுதோல்வியை சந்தித்திருந்தது. இந்த தேர்தலில், தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட்டது. திமுக, காங்கிரஸ், விசிக, சிபஐ,சி பி ஐ எம் உள்ளிட்ட பல்வேறு பிரதான கட்சிகளுடன் நேரடியாக மோதிய அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பெரும் தோல்வியை சந்திதது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளுள் ஒன்றான அதிமுகவிற்கே இவ்வளவு பெரிய தோல்வி கிடைத்தது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. 

ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போட்டியிட்டார். இவரை தொடர்ந்து அமமுக கட்சி சார்பில் டிடிவி தினகரன் தேனியில் போட்டியிட்டார். ஆனால், இரண்டு தொகுதியிலும் இவர்களுக்கு தோல்விதான் கிட்டியது. கடந்த முறை 2019ஆம் ஆண்டு தேர்தலில், அதிமுக 1 தொகுதியை கைப்பற்றியிருந்த நிலையில், இந்த முறை ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாதது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சமாதானத்திற்கு அறைக்கூவல்:

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, சசிகலா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இத்தேர்தலில் திமுக வெற்றி அடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்று குறிப்பிட்டிருந்த அவர்,அதிமுகவினரை ஒற்றுமைக்கு அழைத்தார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வமும் ஒற்றுமைக்காக அழைத்திருக்கிறார். இதையடுத்து. அதிமுகவின் அரசியல் களத்தில் ஏதேனும் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | 'கோயில் கட்டிய மண்ணிலேயே வீழ்ச்சி...' நாட்டை காக்கும் 40க்கு 40 - ஸ்டாலினின் அடுத்த திட்டம் என்ன?

ஓ பன்னீர் செல்வத்தின் முழு அறிக்கை விவரம்:

“ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்." இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.

"தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே” என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். மாண்புமிகு நம் அம்மா அவர்கள் உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் தியாகத்திற்கும் ஆயத்தமாவோம். ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டார்: எஸ்.வி.சேகர் ஜீ தமிழ் நியூஸுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News