நேர்மை பற்றி பேச பாஜகவிற்கு என்ன தகுதி உள்ளது? எம்பி சு. வெங்கடேசன் கேள்வி!

செங்கோலுடைய குறியீடு இரண்டு விதத்தைக் குறிக்கிறது ஒன்று மன்னராட்சி மற்றொன்று அறம் நேர்மை. அறம், நேர்மை பற்றி பேச பாஜகவிற்கு என்ன தகுதி உள்ளது. - சு.வெங்கடேசன் கேள்வி.

Written by - RK Spark | Last Updated : Jul 13, 2024, 07:26 AM IST
  • செங்கோலுடைய குறியீடு இரண்டு விதத்தைக் குறிக்கிறது.
  • ஒன்று மன்னராட்சி மற்றொன்று அறம் மற்றும் நேர்மையின் குறியீடு.
  • அறம், நேர்மை பற்றி பேச பாஜகவிற்கு என்ன தகுதி உள்ளது?
நேர்மை பற்றி பேச பாஜகவிற்கு என்ன தகுதி உள்ளது? எம்பி சு. வெங்கடேசன் கேள்வி! title=

மதுரை சின்ன சொக்கிக்குளம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் YOUNG INDIA அமைப்பு மற்றும் மதுரை மாநகராட்சி சார்பில் மாமதுரை விழா தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஆகஸ்ட் மாதம் இவ்விழா நடைபெற இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளருக்கு அழைப்பு விடுக்கும் நிகழ்வில் பங்கேற்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது இது குறித்து விளக்கம் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? ஏற்கனவே அது சம்பந்தமாக பாஜகவினுடைய மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு நான் மறுப்பு தெரிவித்து ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறேன் அது தவிர்த்து வேறு ஏதும் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

மேலும் படிக்க | புதுக்கோட்டை : என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி குடும்பத்தின் பகீர் புகார்

செங்கோலுடைய குறியீடு இரண்டு விதத்தைக் குறிக்கிறது ஒன்று மன்னராட்சி மற்றொன்று அறம் மற்றும் நேர்மையின் குறியீடு. அறம், நேர்மை பற்றி பேச பாஜகவிற்கு என்ன தகுதி உள்ளது. தேர்தலில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் தமிழ்நாட்டை தமிழ் மக்களை தமிழ் மொழியை உயர்வாக பேசிவிட்டு தமிழ்நாடு தேர்தல் முடிந்தவுடன் உத்தரபிரதேசம், பீகார், ஒரிசாவில் தமிழர்களை இழிவாக பேசியுள்ளார். இதைப்பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என கேள்வி கேட்டேன் அதை மட்டும் விட்டுவிட்டு மற்றொன்று எடுத்து பேசுவது பாஜகவின் வழக்கம் என்றார். மதத்தின் பெயரால் வன்முறையை செய்பவர்களை பற்றி ராகுல் காந்தி பேசியிருக்கிறார். ஆனால், பிரதமர் மோடி இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வன்முனையாளர்கள் என ராகுல் காந்தி பேசியதாக மாற்றி கூறியுள்ளார். திட்டமிட்டு பல மாநிலங்களில் வெறுப்பை தனக்கு சாதகமானதை மட்டுமே பேசி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் வாசலில் இருந்த காந்தி மற்றும் அம்பேத்கர் சிலை இல்லை ஆனால் நாடாளுமன்றத்தில் மற்ற சிலைகள் கொண்டு வருகிறீர்கள் என்னுடைய கேள்வி நாடாளுமன்றத்தில் இருந்த காந்தி மற்றும் அம்பேத்கர் சிலை எங்கே என கேள்வி எழுப்பினார் இதற்கு பதில் சொல்லிவிட்டு மற்ற விவாதத்திற்கு வாருங்கள் என்று தெரிவித்தார். சமூக இயக்கங்கள் அனைத்தும் பாஜகவின் ஏஜெண்டுகள் ராஜ் பவன் ஏஜென்ட் மட்டும் இன்னும் பேசவில்லை ஏன் பேசவில்லை என்று தெரியவில்லை அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள் பழமை வாதிகள் பதற்றம் அடைகிறார்கள் என்றால் முற்போக்காளர்கள் சரியாக பணியாற்றுகிறார்கள் என்று அர்த்தம்.

மேலும் படிக்க | கிசுகிசு : தூதுவிடும் தோழி, பழைய பாசத்தால் கரையும் மாஜிக்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News