6, 9-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடம்!

6-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடங்கள் இடம்பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!

Last Updated : Sep 27, 2018, 01:16 PM IST
6, 9-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடம்! title=

6-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடங்கள் இடம்பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!

6-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் வழங்கப்படும் 3-ஆம் பருவ புத்தகத்தில் பிளாஸ்டிக் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடங்கள் இடம்பெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில்.. "முதற்கட்டமாக 320 பள்ளிகளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

பிளாஸ்டி பாதிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே கொண்டு சேர்ப்பதன் மூலம் நாளைய சமூதாயக்கு நல்ல வழி பிறக்கும்" என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழக பள்ளிகல்வி துறையில் பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகின்றார் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள். முன்னதாக இம்மாதம் 15-ஆம் நாள் பள்ளி படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் அளிக்க 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்கிற அரசாணையில் திருத்தம் செய்யப்படும் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது 6-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடங்கள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்!

Trending News