ஆதார் இணைத்தால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கும் - எப்படி?

Free Medical Treatment | முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட எண்ணுடன் ஆதார் எண் இணைத்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 25, 2024, 03:43 PM IST
  • தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டம்
  • இலவச சிகிச்சை பெறுவது எப்படி?
  • ஆதார் கார்டு இணைக்க வழிமுறை இதோ
ஆதார் இணைத்தால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கும் - எப்படி? title=

CM health insurance scheme | தமிழ்நாட்டில் விரிவான முதலமைச்சர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இருதய அறுவை சிகிச்சை, ரத்த வகை சிகிச்சை, கல்லீரல் சிகிச்சை, நுரையீரல் சிகிச்சை உள்ளிட்ட 1097 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.3 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் நீங்களும் பயன்பெற விரும்பினால் அதற்கு முதலில் இந்த திட்டத்துக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். 

முதலமைச்சர் காப்பீடு திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இந்த திட்டத்தில் சேருவதற்கு பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் 1.20 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு வருமானச் சான்றிதழ் விண்ணப்பித்து பெற வேண்டும். ஆன்லைன் வழியாகவே வருமானச் சான்றிதழ் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, புகைப்படம், சாதிச் சான்றிதழ் கொடுத்தால் இ-சேவை மையங்களில் ஆன்லைனிலேயே வருமானச் சான்றிதழ் கிடைத்துவிடும். அதன்பிறகு, அதே ஆவணங்களைக் கொண்டு முதலமைச்சர் காப்பீடு திட்டத்துக்கும் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பத்தில் கணவர், மனைவி, குழந்தைகள், பெற்றோர் உள்ளிட்டோரின் விவரங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த செயல்முறையை முடித்தால் இ-கார்டு உடனே கிடைக்கும். உங்களிடம் மருத்துவ காப்பீடு அட்டை இருந்து ஆதார் எண் மற்றும் பெயர் விடுபட்டிருந்தாலும் பெயர் சேர்த்தல் விண்ணப்பம் கொடுத்து சேர்த்துக் கொள்ள முடியும். அது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | மத்திய அரசு வழங்கும் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! விண்ணப்பிப்பது எப்படி?

ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் வலைதளத்துக்கு செல்ல வேண்டும். அதில் Beneficiary என்ற Tabல் உள்ள Link Aadhaar to URN என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். தங்களிடம் ஏற்கனவே இருக்கும் 22 இலக்க எண்ணை உள்ளிட்டு, ஒப்புதலை கொடுக்கவும். இப்போது Enroll பட்டனை கிளிக் செய்யவும். இப்போது வேறு பக்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர், ஆதார் விவரம், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும். கடைசியாக ஓகே கொடுத்தால் உங்களின் பெயர், ஆதார் எண் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது என்ற தகவல் காண்பிக்கும். ஏற்கனவே இணைந்திருந்தாலும் அந்த விவரமும் உங்களுக்கு தெரிவிக்கப்படும். 

மேலும் படிக்க | மாநாட்டிற்கு முன்பு தொண்டர்களுக்கு விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News