Tamilnadu Live, Fengal Cyclone Updates : தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்துக்கு நேரில் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார். கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் 50.3 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் லைவ் அப்பேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.