Live : கரையை நோக்கி வரும் பெஞ்சல் புயல், 9 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - அரசு முன்னெச்சரிக்கை

Tamilnadu Live Today, Fengal Cyclone : வங்கக் கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இதனால் பள்ளி கல்லூரி விடுமுறை, புயல் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் குறித்த தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அப்டேட் 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 30, 2024, 11:08 AM IST
    Tamilnadu Fengal Cyclone Live : தமிழ்நாடு பெஞ்சல் புயல் லேட்டஸ்ட் அப்டேட், கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள்
Live Blog

Tamilnadu Cyclone Fengal Latest Update Live : வங்க கடலில் உருவாகியுள்ள பெஞ்சல்/ ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் தமிழ்நாட்டில் கரையை கடக்கிறது. காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இதனையொட்டி அப்பகுதிகளில் மின்சாரம் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. புயல் கரையை நோக்கி நெருங்கி வரும்போது 70 முதல் 90 கிமீ வரை தரைக்காற்று வீசும். இது குறித்து அரசு ஏற்கனவே பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுத்திருக்கிறது. ரெட்அலெர்ட் 9 மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான லேட்டஸ்ட் முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே காணலாம். 

30 November, 2024

Trending News