Tamil Nadu Weather Updates: ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை பெய்யும் போது தமிழகம் தண்ணீரில் மிதப்பது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முக்கியக் காரணம் ஏரி, குளங்கள், வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், ஓடை உள்ளிட்டவைகளை பருவ மழைக்கு முன்னரே சரியாக திட்டமிட்டு, தூர்வாரி ஆழப்படுத்தாமல் இருப்பது தான். இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழைபெய்யும் என ரெட் அலர்ட் (Red Alert) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, எனவே மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறும், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஏற்கனவே பெய்து வரும் தொடர் மழைக் காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான அணைகள், ஏரிகள், குளங்களில் நீர் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.