TN Budget 2024 LIVE: முடிந்தது பட்ஜெட் உரை... சிறப்பம்சங்கள் என்னென்ன?

Tamil Nadu State Budget Session 2024 LIVE Updates: 2024-2025 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 23, 2024, 04:44 PM IST
    தமிழ்நாடு பட்ஜெட் குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் தொடரவும்...
Live Blog

Tamil Nadu State Assembly Budget Session 2024 2025 LIVE Updates in Tamil: முதலமைச்சர் தலைமையிலான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்னும் சில மாதங்களில் மூன்றாண்டுகள் நிறைவு பெற உள்ளது. அதுமட்டுமின்றி, வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (TN Budget 2024) சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. திமுக அரசின் எதிர்கால திட்டங்கள், கடந்த காலங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களின் மீதான செயல்பாடு ஆகியவை குறித்து இன்றைய பட்ஜெட் உரையில் அறிவிப்புகள் இருக்கும். மேலும், மக்களவை தேர்தலில் திமுக எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் நிலையில், தேர்தலை மனதில் வைத்து ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே உள்ளது. 

2024ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த பிப். 12ஆம் தேதி ஆளுநர் உரை நிகழ்வுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இன்று (பிப். 19) சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டின் நிதி அமைச்சரான தங்கம் தென்னரசு தனது முதல் பட்ஜெட் உரையை இன்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் இன்று 10 மணிக்கு பட்ஜெட் உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு பட்ஜெட் குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் தொடரவும்...

23 July, 2024

  • 12:07 PM

    TN Budget 2024 LIVE: பட்ஜெட்உரையை முடித்தார் நிதி அமைச்சர்

    2 மணிநேரம் 7 நிமிடத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வாசித்து முடித்தார், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

  • 11:51 AM

    TN Budget 2024 LIVE: கலைஞர் பன்னாட்டு அரங்கம்

    3 லட்சம் சதுர அடியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • 11:35 AM

    எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

    தொழில் முதலீடு ஊக்குவிப்பு துறை - ரூ. 2,795 கோடி

    சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை - ரூ.1,557 கோடி

    நீர்வளத் துறை - ரூ.8,398 கோடி

    விளையாட்டுத் துறை - ரூ.440 கோடி

    உயர்கல்வித் துறை - ரூ.8,212 கோடி

    பள்ளிக்கல்வித் துறை - ரூ. 44,042 கோடி

  • 11:27 AM

    TN Budget 2024 LIVE: மெட்ரோ ரயில் திட்டம் விரிவான திட்ட அறிக்கை

    மெட்ரோ ரயில் திட்டம் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை சிவப்பு லைன் மெட்ரோ, பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை பச்சை லைன் மெட்ரோ, கோயம்பேடு முதல் ஆவடி வரை மஞ்சள் லைன் மெட்ரோ கொண்டு வரப்படும் என அறிவிப்பு. 

  • 11:16 AM

    TN Budget 2024 LIVE: ஜவுளி பூங்கா

    விருதுநகர் & சேலத்தில் ரூ.2,483 கோடி ரூபாய் மதிப்பில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம், 2.08 இலட்சம் வேலைவாய்ப்பு 

  • 11:14 AM

    TN Budget 2024 LIVE: ரூ.333 கோடி ஒதுக்கீடு

    துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை அனைத்து நிலைகளிலும் மருத்துவக் கட்டமைப்புகளைத் தரம் உயர்த்த ரூ.333 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

  • 11:05 AM

    TN Budget 2024 LIVE: ரூ. 6 கோடி ஒதுக்கீடு

    1,000 நபர்களுக்கு ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி. ஆறு மாத உறைவிடப் பயிற்சி ரூ.6 கோடி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

  • 10:55 AM

    TN Budget 2024 LIVE: புதிய மகளிர் சுய உதவி குழுக்கள்

    10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். ரூ.35,000 கோடி ஒதுக்கீடு

  • 10:52 AM

    TN Budget 2024 LIVE: உயர்கல்வி இலவசம்

    மூன்றாம் பாலினத்தோரின் கல்லூரிப் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும் என அறிவிப்பு

  • 10:49 AM

    TN Budget 2024 LIVE: ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

  • 10:47 AM

    TN Budget 2024 LIVE: புதுமைப் பெண் திட்டம்

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவிகளுக்கும் "புதுமைப் பெண் திட்டம்" விரிவாக்கம் செய்யப்படும். இதற்கு ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • 10:44 AM

    TN Budget 2024 LIVE: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

    ஊரகப் பகுதி அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1-5 வகுப்பு மாணவர்களுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 

  • 10:39 AM

    TN Budget 2024 LIVE: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு எவ்வளவு ஒதுக்கீடு?

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 15 இலட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுவருவதாக தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு அடுத்தாண்டில் இந்த திட்டத்திற்கு ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். 

  • 10:36 AM

    TN Budget 2024 LIVE: நிதிகள் புனரமைப்பு

    தமிழ்நாட்டின் முதன்மை நதிகள் புனரமைப்புக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் - நிதி அமைச்சர் தென்னரசு தென்னரசு

  • 10:29 AM

    TN Budget 2024 LIVE: ரூ.500 கோடி ஒதுக்கீடு

    5,000 ஏரிகள், குளங்கள் புனரமைக்கப்பட உள்ளது. இதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

  • 10:22 AM

    TN Budget 2024 LIVE: முதலமைச்சர் தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம்

    5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து வறுமையை அகற்றிட முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் கொண்டுவரப்படும் - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

  • 10:20 AM

    TN Budget 2024 LIVE: 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்

    2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். இதன்மூலம், குடிசையில்லா தமிழகம் அமைக்கப்படும். 

  • 10:14 AM

    TN Budget 2024 Live: முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு!

    - கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு

    - முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

    அடுத்த 3 ஆண்டுகளில் 600 முக்கிய நூல்கள் தமிழில் மொழிப்பெயர்க்கப்படும்

  • 10:07 AM

    TN Budget 2024 LIVE: விவசாயிகளுக்கு மின்சாரம்

    விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் - பட்ஜெட் உரையியில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

  • 10:06 AM

    TN Budget 2024 LIVE: யூ-ட்யூப் நேரலை இணைப்பு

    சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய தொடங்கினார். இதனை யூ-ட்யூபில் நேரலையில் காணலாம். 

Trending News