தாக்கல் செய்யப்பட்ட 1,587 மனுக்களில் 932 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்!!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை 613 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றன. தனியார் கார், பேருந்து, அரசுப் பேருந்துகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் ஆகியவற்றில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 613 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் 18 தொகுதி இடைதேர்தலில் தாக்கலான 513 வேட்பு மனுக்களில் 213 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், 305 ஏற்கபட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்காக தாக்கலான 1,587 மனுக்களில் 932 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளதாகவும், 655 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிவ்த்துள்ளனர். அதில், அதிகபட்சமாக கரூர் மக்களவை தொகுதியில் 43 வேட்பு மனுக்கள் ஏற்கபட்டுள்ளதாகவும், குறைந்தபட்சமாக நீலகிரி மக்களவை தொகுதியில், 10 வேட்பு மனுக்கள் ஏற்கபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு செல்லப்பட்ட வகையில் .107.24 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்தபடியாக, உத்தரப்பிரதேசத்தில் 104.53 கோடி ரூபாயும், ஆந்திர பிரதேசத்தில் 103.4 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன.