பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது: உயர் நீதிமன்றம்

பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 23, 2023, 07:27 AM IST
  • பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்கக் கோரி வழக்கு
  • சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு.
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்த தமிழக அரசு.
பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது: உயர் நீதிமன்றம்  title=

பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும்  நடைமுறையை  முழுவதுமாக ஒழிக்கக் கோரியும், ஊழியர்களை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரியும், சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை தடுக்க நடவடிக்கை

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை தடுப்பது தொடர்பான  நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் அமல்படுத்த  வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 பாதாள சாக்கடை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தியுள்ளதாக மனுதாரர் புகார்

அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் சென்னை பல்கலைக்கழகத்திலும், மன்னார்குடி நகராட்சியிலும் மனிதர்களை பயன்படுத்தியுள்ளதாக மனுதாரர் அமைப்பு சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. சென்னை பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் உதவிப் பொறியாளர், கேண்டீன் உரிமையாளர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மன்னார்குடி சம்பவம் தொடர்பான விவரங்களைப் பெற்று தெரிவிப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | சந்திரயான் 3: எல்லாம் தோல்வியடைந்தாலும் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் - எப்படி?

நீதிமன்ற உத்தரவை உள்ளாட்சி அமைப்புகள் அமல்படுத்துவதில்லை என அதிருப்தி

இதையடுத்து, பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்யும் நிகழ்வுகளை சகித்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை உள்ளாட்சி அமைப்புகள் அமல்படுத்துவதில்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அனைத்து நகராட்சிகளும், பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யத் தேவையான கருவிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கருவிகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் குறித்து தகவல் தெரிவிக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை செப்டம்பர் 18 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை

முன்னதாக, கடந்த ஜுலை மாதம், பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதை மீறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்கும் தொடரப்படுகிறது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்தது. பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்கக் கோரியும், ஊழியர்களை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரியும், சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் அனுப்பிய புகைப்படங்களை பெருமையுடன் பகிர்ந்த இஸ்ரோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News