ஆன்லைன் விளையாட்டுகள் மீதான தடை; நீதிமன்றம் கூறியது என்ன

மொபைல் போன்கள், லேப்டாப், இணையம் மற்றும் ஆன்லைன் கேமிங்  ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் உலகில், இந்த விஷயங்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகி விட்டன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 2, 2021, 08:50 AM IST
  • ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய, மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு.
  • குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணங்கள் விதைக்கப்படுவதோடு, சிலர் தற்கொலை முயற்சிகளை கூட மேற்கொள்கின்றனர்.
ஆன்லைன் விளையாட்டுகள் மீதான தடை; நீதிமன்றம் கூறியது என்ன title=

Onlie Games: மொபைல் போன்கள், லேப்டாப், இணையம் மற்றும் ஆன்லைன் கேமிங்  ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் உலகில், இந்த விஷயங்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகி விட்டன. கொரோனா (Corona Pandemic) காலத்தில் குழந்தைகளும், ​​ஆன்லைன் வகுப்புகளுக்காக இணையத்தை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில காலங்களாகவே, ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு பல குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் போக்கு காணப்படும் நிலையில், கொரோனா காலத்தில், இந்த போக்கு மேலும் அதிகரித்துள்ளது

ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு (Online Games) அடிமையாகும் குழந்தைகள், விளையாட்டில் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுகின்றனர். அதனால் அவர்கள் மனதில் வன்முறை எண்ணம் உருவாகிறது, இது அவர்களின் உடல்நலம் மற்றும் கல்வியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும். 

இதை கருத்தில் கொண்டு , மார்டின் ஜெயக்குமார் என்பவர், ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய, மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

ALSO READ | இந்திய அரசுக்கு உதவிய மோசடி செய்து தப்பியோடிய நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வீடியோ விளையாட்டுகளுக்கு குழந்தைகள் மற்றும் இளைஞர்களை அடிமையாகும் போக்கு கவலைக்குரியதாகும். குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணங்கள் விதைக்கப்படுவதோடு, சிலர் தற்கொலை முயற்சிகளை கூட மேற்கொள்கின்றனர். இது தொடர்பான கவலைகள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசுகள் தான் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியது.

இதுபோன்ற விஷயங்களில் எந்தவொரு தடை உத்தரவையும் நீதிமன்றங்கள் தற்போது நிறைவேற்ற முடியாது என்று  நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது போன்ற கொள்கை விஷயங்கள் தொடர்பாக மத்திய அல்லது மாநில அரசுகள் கவனிக்க வேண்டும் என்று கூறிய தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர்  கூறினர்

மேலும், மனுதாரர் இது குறித்து நான்கு வாரங்களுக்குள், மத்திய மாநில அரசுகளிடம் மனு அளிக்குமாறு கூறியது. அந்த மனுவை 8 வார காலத்திற்குள் பரிசீலித்து தகுந்த முடிவை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

ALSO READ | COVISHIELD VACCINE: புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News