குரங்கணி தீவிபத்தில் மீட்கப்பட்வர்களுக்கு தரமான சிகிச்சை!

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் இருந்து மீட்கப்பட்வர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்!

Last Updated : Mar 14, 2018, 04:24 PM IST
குரங்கணி தீவிபத்தில் மீட்கப்பட்வர்களுக்கு தரமான சிகிச்சை! title=

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் இருந்து மீட்கப்பட்வர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து சுமார் 39 பேர் சென்றனர்.

கொழுக்குமலைப் பகுதியில் இருந்து அனைவரும் மீண்டும் அடிவாரத்துக்கு திரும்பியபோது, திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதில் அக்குழுவினரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் காட்டுத்தீயில் சிக்க நேர்ந்தது, இதையடுத்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இக்கோர விபத்தில் இதுவரை 11 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், மேலும் பலர் கவலைகிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காட்டினுள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் இராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து உத்வேகத்துடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இவ்விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 4 பேரையும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பார்த்து உடல் நலம் விசாரித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது... விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Trending News