மம்முட்டி, ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகிறது ‘குபேரன்’...

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, ராஜ்கிரணும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் தமிழ்-மலையாளம் திரைப்படத்திற்கு குபேரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Last Updated : Nov 1, 2019, 09:20 AM IST
மம்முட்டி, ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகிறது ‘குபேரன்’...

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, ராஜ்கிரணும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் தமிழ்-மலையாளம் திரைப்படத்திற்கு குபேரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் முதல் பார்வை பேஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் அதிகரித்துள்ளது. இந்த படத்தை அஜய் வாசுதேவ் இயக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் தயாராகும் இத்திரைப்படத்தை ஜோபி ஜார்ஜ் தயாரித்து வருகிறார். 

‘குபேரன்’ படத்தின் முழு படப்பிடிப்பும் கேரளா மற்றும் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மாசிலே, அரண் மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய வெள்ளி விழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.

இத்திரைப்படத்தில் மீனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படத்தில் அவர் ராஜ்கிரண் ஜோடியாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. 

இருவரும் முன்னதாக ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தார்கள். 28 வருடங்களுக்குப்பின், இருவரும் மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் இத்திரைப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடி இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோலிவுட், மல்லுவுட் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள இத்திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories

Trending News