காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி!

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடாது என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்!

Last Updated : Mar 1, 2019, 10:57 AM IST
காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி! title=

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடாது என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்!

வரும் நாடாளுமன்ற தேர்தலில், திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி செயல்படும் என அக்கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும், கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடனும் தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்தன. நேற்று முன்தினம் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக கட்சியுடன், கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட மனிதநேய ஜனநாயக கட்சி, கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார். இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில், மனிதநேய ஜனநாயக கட்சி,  போட்டியிடவில்லை என அவர் தெரிவித்தார். மேலும், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் அன்சாரி கூறினார்.

நாட்டின் பன்முகத்தன்மை மிக முக்கியம் என்பதால் மதசார்பற்ற கட்சிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Trending News