மழை வருமா?...வராதா?; இன்றைய வானிலை முன்னறிவிப்பு...!

தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு, சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 17, 2018, 01:13 PM IST
மழை வருமா?...வராதா?; இன்றைய வானிலை முன்னறிவிப்பு...!  title=

தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு, சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!   

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பவேறு பகுதியில், வெப்ப சலனம் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் தொடர்ந்து கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதையடுத்து, இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது...!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமானது முதல் கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 

Trending News