அதிமுக மருத்துவரணி மாவட்ட செயலாளர் நடத்தி வந்த போலி க்ளினிக்

அதிமுக தருமபுரி மாவட்ட மருத்துவரணி செயலாளர் கிருஷ்ணசாமி, BHMS அரசு பதிவு பெற்ற மருத்துவர் என பெயர் பலகை வைத்தபடி, சம்மந்தபட்ட க்ளினிக்கில் ஹோமியோபதி மருத்துவத்திற்கு பதிலா ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 24, 2021, 09:12 AM IST
அதிமுக மருத்துவரணி மாவட்ட செயலாளர் நடத்தி வந்த போலி க்ளினிக் title=

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வாணியர் தெருவில் வீடு ஒன்றின் மாடியில் விஜியா க்ளினிக் என்ற பெயரில் க்ளினிக் ஒன்றினை அதிமுக தருமபுரி மாவட்ட மருத்துவரணி செயலாளர் கிருஷ்ணசாமி, பி எச் எம் எஸ் (BHMS) அரசு பதிவு பெற்ற மருத்துவர் என பெயர் பலகை வைத்தபடி, சம்மந்தபட்ட க்ளினிக்கில் ஹோமியோபதி மருத்துவத்திற்கு பதிலாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததது தொடர்பாக, அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து தருமபுரி சரக  மருந்துகள் ஆய்வாளர் சந்திரமேரி தலமையிலான மருத்துவ அதிகாரிகள் சம்மந்தபட்ட க்ளிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர், அப்போது இரண்டு மாடி கட்டடிடத்தில் படுக்கை வசதியுடன் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும், நோயளிகளுக்கு பயன்படுத்திய ஊசிகள், குளுக்கோஸ் பாட்டில்கள், மருந்து மாத்திரைகள் காலி டப்பாக்கள் என சுகாதாரமற்ற முறையில் மூட்டை மூட்டையாக மருத்துவகழிவுகள் உள்ளே இருப்பது கண்டு  சோதனைக்கு வந்த அரசு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ALSO READ | மதுரை அருகே மர்மக்காய்ச்சலால் 7 வயது சிறுமி உயிரிழப்பு: பீதியில் பொதுமக்கள்!

இதனை தொடர்ந்து சம்மந்தபட்ட க்ளினிக்கிலிருந்த நோயாளிகளை, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர், சம்மந்தபட்ட அதிமுக நிர்வாகி கிருஷ்ணசாமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி கொண்டிருக்கும் போதே சான்றிதழ்களை எடுத்துவருவதாக கூறிவிட்டு, அங்கிருந்து தப்பி தலைமறைவானார் இதனை தொடர்ந்து அதியமான் கோட்டை போலீசாருக்கு அதிகாரிகள் கொடுத்த தகவலின்  பேரில் தலைமறைவான அதிமுக மருத்துவரணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சம்மந்தபட்ட க்ளினிக்கில் இருந்த ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்து சம்மநதபட்ட க்ளினிக்கை மூடி வருவாய்த்துறை முன்னிலையில், சோதனைக்கு வந்திருந்த அதிகாரிகள் சீல் வைத்தனர். தருமபுரி மாவட்ட மருத்துவரணி செயலாளராக கிருஷ்ணசாமி  வலம் வந்ததால் கடந்த அதிமுக ஆட்சியில் இவர் மீது பல்வேறு புகார்கள் சென்றும்  காவல்துறையினர் இவரை கைது செய்யாமல் இருந்துள்ளனர்.

ALSO READ | சேலம்: வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து- 1 பலி, 3 வீடுகள் முற்றிலும் சேதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News