இலங்கையின் வடக்குப் மற்றும் மன்னார் வளைகுடா பக்கத்தில் குறிப்பிடத்தக்க குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தென் மேற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 240 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு மற்றும் வடக்கு திசை நோக்கி நகர்ந்து கடற்கரை ஓரமாகச் செல்லக்கூடும் என பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையம் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் எனவும் காற்றின் வேகம் 50-60 கிலோமீட்டர் முதல் 70 கிலோமீட்டர் வரை இருக்கும் என கணித்துள்ளனர்.
கற்று வேகமாக வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். முக்கியமாக நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் குளச்சல் துறைமுகங்களில் இருக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.