அதிமுக பிரமுகருக்கு எதிரான மரண தண்டனை ரத்து

தாய், தந்தை, சகோதரர் ஆகிய மூவரையும்  பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் மகன் - மருமகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 24, 2022, 05:57 PM IST
  • 2019ஆம் ஆண்டு மே மாதம் மூவரும் உயிரிழந்தனர்.
  • போலீசார் விசாரணையில் மகன் கோவர்தனும், மனைவியும் கொலை செய்ததாக தெரியவந்தது.
  • 2021ஆம் ஆண்டு அக்டோபரில் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.
அதிமுக பிரமுகருக்கு எதிரான மரண தண்டனை ரத்து  title=

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், காவேரிப்பாக்கம் சுப்பாராயன் தெருவை சேர்ந்த ராஜு - கலைச்செல்வி தம்பதிக்கு கோவர்த்தனன், கவுதமன் என இரு மகன்கள் உள்ளனர். திண்டிவனம் நகர அதிமுக மாணவரணி தலைவர் மற்றும் நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருந்த கோவர்த்தன், புதிய தொழில் தொடங்க பணம் கேட்டு குடும்பத்தினருக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். அவருக்கு பணம் கொடுக்காததால் பெற்றோர் மற்றும் சகோதரன் கவுதமன் மீதும், கோவர்த்தன்  கோபத்தில் இருந்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, 2019 மே 15ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ராஜுவின் வீட்டில் நெருப்பும், புகையும் வந்ததைக்கண்டு அக்கம்பக்கத்தினர் வாசல் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, ராஜு, கலைச்செல்வி, கவுதமன் ஆகியோர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர். ஏசி பெட்டி வெடித்து பெற்றோரும், சகோதரனும் இறந்து விட்டதாக கோவர்த்தன், திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில், மூவரையும் கோவர்த்தனனும், அவரது மனைவி தீபகாயத்திரியும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தது தெரியவந்தது.

மேலும் படிக்க | சிலை கடத்தல் வழக்கு... ஆஜராகவில்லை என்றால் தள்ளுபடி செய்யப்படும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏசி வெடித்து மரணமா?

இதையடுத்து இருவர் மீதும்  காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் காரணமாக, இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்,  கோவர்த்தனன் மற்றும் தீபகாயத்ரியை குற்றவாளிகளாக அறிவித்து, இருவருக்கும்  மரண தண்டனை விதித்து 2021 அக்டோபரில் தீர்ப்பளித்தது.

மரண தண்டனையை உறுதி செய்ய வழக்கு ஆவணங்களை சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. அதேபோல தண்டனையை எதிர்த்து இருவரும் மேல் முறையீடு செய்திருந்தனர். கோர்வத்தன் மற்றும் அவரது மனைவி சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்குகள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு முன் விசாரணையில் இருந்தது.

பல்டி அடித்த சாட்சியங்கள்...

விசாரணையில், "இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல சாட்சிகள், தங்களது நிலைப்பாட்டில் இருந்து மாறிவிட்டனர். ஏசி வெடித்துதான் மூவரும் இறந்தனர். இதில், திட்டமிட்ட கொலை என்பது நிரூபிக்கப்படவில்லை" எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கோவர்த்தன் மற்றும் தீபகாயத்திரிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். வேறு வழக்குகளில்  சம்பந்தப்படவில்லை என்றால் இவர்கள் இருவரையும்  உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க | அண்ணா பிறந்தநாள் : நன்னடத்தை காரணமாக கைதிகள் படிப்படியாக விடுவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News