கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ எட்டியிருக்கும் நிலையில், இதற்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு இது மிகப்பெரிய உதாரணம் என்று கூறியிருக்கும் அவர், இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் மீது அரசியல் பாரபட்சமின்றி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தன்னுடைய கண்டனத்தை எல் முருகன் தெரிவித்தார்.
மேலும் படிக்க | தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது ஏன்? வரலாறும் பின்னணியும்
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முருகன், தனக்கு வாக்களித்த அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மேட்டுப்பாளையம் சென்றார். அங்கு அவருக்கு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.கவினர் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வாகனத்தில் இருந்தவாறு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன், நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததாலும் இந்த தொகுதியின் மக்களுக்காகவும், தமிழக வளர்ச்சிக்கு பணியாற்ற பிரதமர் தன்னை ராஜ்ஜியசபா எம்.பி பதவி அளித்து மத்திய இணை அமைச்சர் பதவியும் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முருகன், எனவே நான் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தேர்தலின் போது நீலகிரி தொகுதிக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயமாக நிறைவேற்றுவேன் என பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எல்.முருகன், தமிழகத்தில் இன்று கள்ளச்சாராயம் குடித்து ஏற்பட்டுள்ள உயிரிழப்பு தமிழக அரசின் செயலற்ற தன்மையை வெளிப்படையாக காட்டுகிறது என விமர்சித்தார். மேலும் ஆளும் கட்சியின் துணையோடு தான் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக தகவல் வரும் நிலையில் காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் இன்னும் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பார்வையிடவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.
பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் வாழ்க்கைக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் விற்பனையில் அரசியல் பாரபட்சம் இன்றி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் முத்துசாமி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்பதுடன், இருவரும் பதவி விலக வேண்டும்" என பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ