சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணாசாலை ஓரத்தில் கருணாநிதியின் சிலை நிறுவ இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 12 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டுள்ளது.
இதனை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று திறந்துவைத்தார். அதன் பிறகு கலைவாணர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி. கனிமொழி, எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “வாழ்விலோர் பொன்னாள் என்றும் எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இன்று உள்ளது. தமிழ்நாட்டின், தமிழர்களின் நிலையை மாற்றியவர் கலைஞர். அதனால்தான் அவருக்கு தமிழ்நாடு முழுவதும் சிலை அமைக்கப்படுகிறது.
இந்த சிலைக்கு சிறப்பு என்னவென்றால் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையில் கலைஞர் சிலை அமைக்கப்பட்டுள்ளது பொருத்தமாக இருக்கிறது. கலைஞரால்தான் ஓமந்தூரார் கட்டடம் கட்டப்பட்டது. தற்போது மருத்துவமனையாக செயல்பட்டாலும் கம்பீரமாக இருக்கிறது.
நமது நட்புக்குரிய இனிய நண்அராக மட்டும்தான் வெங்கையா நாயுடு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிலையை திறந்துவைத்தார்.
ஜெயலலிதா ஆட்சியில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது அந்த ஆட்சியை கடுமையாக விமர்சித்தவர் வெங்கையா நாயுடு. அதே நட்பை தொடர்ந்து பேணிவருகிறார்.
கலைஞரின் சிலையை யாரை வைத்து திறக்கலாம் என எண்ணியபோது குடியரசுத் துணை தலைவர் முகம்தான் நினைவில் வந்தது. வெங்கையா நாயுடு மிகச்சிறந்த நாடாளுமன்ற ஜனநாயகவாதி என பெயர் எடுத்தவர். மாநிலங்களவையின் கொந்தளிப்பான சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டவர்.
மேலும் படிக்க | தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் நிவாரண பொருட்கள்
இன்று அவர் கலைஞர் சிலையை திறந்தது சால பொருத்தமாக அமைந்திருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கலைஞரின் உருவப் படத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைத்தார். சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திறந்துவைத்திருக்கிறார்.
இந்தியாவின் பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களை உருவாக்கி, இந்தியாவில் நிலையான ஆட்சியை உருவாக்க துணை நின்றவர் கலைஞர். நவீன தமிழ்நாட்டையும் உருவாக்கியவர் அவரே.
மேலும் படிக்க | மரம் அறுக்கும் இயந்திரத்தால் மனைவி மற்றும் பிள்ளைகளை அறுத்து கொன்ற ஐடி ஊழியர்!
தமிழ்நாட்டில் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடியலாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அத்தகைய மக்களுக்காக எழுதினார், போராடினார், ஆட்சியில் திட்டங்கள் தீட்டினார். அந்தத் திட்டங்களால் உருவானதுதான் இந்த தமிழ்நாடு. அதனால்தான் அவர் நவீன தமிழ்நாட்டின் தந்தை என்கிறோம்.அவர் கோடிக்கணக்கான மக்கள் நெஞ்சங்களில் வாழ்வார். வாழ்க வாழ்க வாழ்கவே கலைஞர் புகழ் வாழ்கவே” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR