ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தை கட்சி தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்., டெல்லியை தவிர்த்து தமிழகத்தில் யாராலும் அரசியல் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு., தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவெடுக்கும்.
- @ikamalhaasan #NammavarPongal pic.twitter.com/aVF7N73TQB— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 16, 2019
டெல்லியை தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது. தமிழக அரசியலில் டெல்லியும் முக்கிய பங்கு வகிக்கின்றது என தெரிவித்த அவர்., தான் இந்தியன் எனவும், ஆனால் முதலில் தமிழன் எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு., மக்களுக்கு இலவசம் கொடுப்பதில் தவறில்லை. இலவசமாக கல்வியை முதலில் கொடுப்போம், மக்களின் பணத்தை மக்களிடம் கொடுப்பதில் தவறில்லை, என தெரிவித்துள்ளார்.