TN Weather: ஆகஸ்ட் 3 வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 30, 2021, 05:25 PM IST
TN Weather: ஆகஸ்ட் 3 வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! title=

தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர, கோவை, நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu) மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும்  ஆகஸ்ட் 1 ஆம் தேதியிலிருந்து 3 ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் (IMD) கூறியுள்ளது. 

ALSO READ: ஜம்மு காஷ்மீர் கிஸ்த்வர் மாவட்டத்தில் மேக வெடிப்பு: 4 பேர் பலி, 36 பேரைக் காணவில்லை

சென்னையை (Chennai) பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று, அதாவது வெள்ளிக்கிழமையும் நாளையும் (சனிக்கிழமை) வடமேற்கு வங்க கடல் பகுதியில் அதிக கடல் சீற்றம் இருக்கும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மத்திய அரபிக்கடல், தென்மேற்கு மற்றும் வடக்கு கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ: லண்டனில் கொட்டித்தீர்க்கும் மழை: வெள்ளப்பெருக்கால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News