தேசிய கண்தானம் தினம்: தன்னுடைய கண்களை தானம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாளை தேசிய கண்தான தினம் என்பதால், தன்னுடைய கண்களை தானம் செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 7, 2020, 11:08 AM IST
  • நாடு முழுவதும் நாளை தேசிய கண்தான தினம் கொண்டாடப்படுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய கண் தானம் குறித்து விழிப்புணர்வு.
  • தன்னுடைய கண்களை தானம் செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
  • ஒரு வயது முதல் அனைத்து வயதினரும் கண்தானம் செய்யலாம்
  • தேசிய கண் தானம் 1985 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது
தேசிய கண்தானம் தினம்: தன்னுடைய கண்களை தானம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி title=

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய கண் தானம் குறித்து விழிப்புணர்வு பதினைந்து நாட்கள் நடத்தப்படுகிறது. நாளை தேசிய கண்தான தினம் (National Eye Donation Day) என்பதால், தன்னுடைய கண்களை தானம் செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) அறிவித்துள்ளார். இது அனைவருக்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும். 

கண் தானம் செய்ய ஒப்புதல் அளித்து கண் தான படிவத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கையெழுத்திட்டார். அந்த படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

National Eye Donation Day 2020

2020 ஆம் ஆண்டுக்கான தேசிய கண் தான துவக்க தினம் 25 ஆகஸ்ட் 2020 அன்று தொடங்கியது. 08 செப்டம்பர் 2020 அன்று நிறைவடைகிறது. நாளை (செப்டம்பர் 8) தேசிய கண்தான தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது 35 வது தேசிய கண் தானம் ((National Eye Donation Day) ஆகும்

தேசிய கண் தானம் 1985 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒரு வயது முதல் அனைத்து வயதினரும் கண்தானம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News