இப்படி யாரும் செய்ய வேண்டாம்.. அலட்சியத்தால் போன உயிர்!

விவசாயி ராஜசேகர் (Farmer Rajasekar) ஆற்றை கடக்க முயன்றபோது உறவினர் ஒருவர் ராஜசேகரை எச்சரித்தவாரு எடுத்த வீடியோ (Viral Video) சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 8, 2021, 03:02 PM IST
  • தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
  • ராஜசேகரை எச்சரித்தவாரு எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
  • தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.
இப்படி யாரும் செய்ய வேண்டாம்.. அலட்சியத்தால் போன உயிர்!

மதுரை: உசிலம்பட்டி (Usilampatti) அருகே ஆற்றை கடக்க முயன்ற விவசாயி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தவரின் உடல் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கண்மாயில் மீட்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் சூழலில், இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் (Madurai District) மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் அடிவார பகுதியான உசிலம்பட்டி, பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், சாப்டூர் கேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் பேரையூர் அருகே சாப்டூர் - ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் என்ற  விவசாயி தனது தோட்டத்திற்கு செல்வதற்காக விட்டல்பட்டி ஆற்றை கடந்து செல்ல முயன்ற போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் (Rain Floods) ராஜசேகர் அடித்துச் செல்லப்பட்டார்.

ALSO READ | வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த நிறைமாத கர்ப்பிணி மீட்பு!

இதனையடுத்து உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், விரைந்து வந்த டி.கல்லுப்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் விடிய விடிய இரவு முழுவதும் தேடி சாப்டூர் அருகே உள்ள கண்மாயில் ராஜசேகரின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

விவசாயி ராஜசேகர் (Farmer Rajasekar) ஆற்றை கடக்க முயன்றபோது உறவினர் ஒருவர் ராஜசேகரை எச்சரித்தவாரு எடுத்த வீடியோ (Viral Video) சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் குறித்து சாப்டூர் போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ |  30 அடி உயர மின்கம்பியில் தொங்கிய இளைஞரின் சடலம்!

வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை தண்ணீரில் தத்தளித்து வருகிறது. ஓயாமல் பெய்து வரும் மழையால் மக்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பல சுரங்கப்பாதைகள் முழுவதும் நீரினால் முற்றிலும் மூழ்கிவிட்டது. அதுமட்டுமல்லாது பல்வேறு தடங்களிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, இடுப்பளவு தண்ணீரில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வட தமிழகத்தை நோக்கி வரும் எனன்பதால், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கு (Tamil Nadu Rains Updates) வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு (IMD) மையம் கூறியுள்ளது. 

ALSO READ |  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News