தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முடிகிறது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளையுடன் முடிவடைகிறது. இது இயல்பான அளவை விட 2 சதவீதம் அதிகமாகும்.

Last Updated : Dec 30, 2019, 10:13 AM IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முடிகிறது title=

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளையுடன் முடிவடைகிறது. இது இயல்பான அளவை விட 2 சதவீதம் அதிகமாகும்.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். தமிழகத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில்தான் அதிக அளவு மழை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 147 சதவீதம் வரை பெய்ததால் தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் கடலுக்குள் சென்றது.

இது இயல்பான அளவை விட 2 சதவீதம் அதிகமாகும். இருந்தபோதிலும் சென்னையில் இயல்பான அளவை விட 19 சதவீதம் குறைவான மழையே பெய்துள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு  பருவமழை காலம் நாளை டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிகிறது. கடல்காற்று ஜனவரி முதல் வாரம் வரை நீடித்தாலும், நாளை 31-ஆம் தேதி வரைதான் பருவமழை கணக்கிடப்படும். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை நாளையுடன் முடிவடைகிறது. மேலும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் மழை பெய்தால் குளிர்கால மழையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News