பொதுசெயலர் பதவி: 61 பக்க அறிக்கை தாக்கல் செய்தது ஓபிஎஸ் அணி

சசிகலா பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம் அணியினருக்கு அனுப்பி இருந்தது. இதற்கான பதிலை ஓ பன்னீர்செல்வம் அணியினர் இன்று வழங்குகினார்.

Last Updated : Mar 14, 2017, 12:50 PM IST
பொதுசெயலர் பதவி: 61 பக்க அறிக்கை தாக்கல் செய்தது ஓபிஎஸ் அணி title=

சென்னை: சசிகலா பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம் அணியினருக்கு அனுப்பி இருந்தது. இதற்கான பதிலை ஓ பன்னீர்செல்வம் அணியினர் இன்று வழங்குகினார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என்று அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் ஓ. பன்னீர்செல்வம் அணி மனு அளித்தது. இதையடுத்து, இம்மனுவிற்கு பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி கடந்த 10-ம் தேதி, 70 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சசிகலா தனது வழக்கறிஞர்கள் மூலம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். 

சசிகலா அனுப்பி இருந்த பதில் மனுவை அடுத்து, இப்பதிலுக்கு மார்ச் 14-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 

சசிகலாவின் பதிலுக்கு ஓ பன்னீர்செல்வம் அணியினர் விரிவாக விளக்கமளித்துள்ளனர். 61 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், சசிகலாவின் ஒவ்வொரு பதிலுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் தாக்கல் செய்தார்.

Trending News