ஓபிஎஸ் அணியில் மற்றொரு விக்கெட்! கோவை செல்வராஜ் விலகல்

அதிமுகவில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அதிரடியாக அறிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 3, 2022, 06:40 PM IST
  • ஓபிஎஸ் அணியில் மற்றொரு விக்கெட்
  • அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ்
  • ஓபிஎஸ் - இபிஎஸ் சுயநலவாதிகள் என சாடல்
ஓபிஎஸ் அணியில் மற்றொரு விக்கெட்! கோவை செல்வராஜ் விலகல் title=

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட தொடங்கியதில் இருந்து, கோவையைச் சேர்ந்த கோவை செல்வராஜ் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வந்தார். மேலும், ஓபிஎஸ் அணி சார்பில் பல்வேறு இடங்களில் பேட்டியளித்த அவர், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியை கடுமையாக விமர்சித்து வந்தார். ஓபிஎஸ் தான் அதிமுகவின் எதிர்காலம், அதிமுகவை தலைமையேற்று நடத்தும் தகுதி அவருக்கு மட்டுமே இருக்கிறது என்றெல்லாம் தொடர்ச்சியாக பேசி வந்தார். அதிமுக பலமாக இருக்கும் கொங்கு பகுதியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலமாக இருக்கும்போதும், ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக பார்க்கப்பட்டு வந்தார் கோவை செல்வராஜ். 

மேலும் படிக்க | ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக - திருமாவளவன் வலியுறுத்தல்

ஆனால், அவர் திடீரென அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமியை சாடியிருக்கும் அவர், இந்தமுறை ஓ.பன்னீர்செல்வத்தையும் சாடியிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களின் சுயநலத்துக்காகவே சண்டைபோட்டுக் கொண்டிருப்பதாகவும், இதனால் அதிமுகவிற்கு எந்த பயனும் இல்லை என தெரிவித்திருக்கும் அவர், உடனடியாக கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ், திடீரென ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன? என்பதை தோண்டி துருவி வருகின்றனர் அதிமுக நிர்வாகிகள். ஓபிஎஸ்ஸின் செயல்பாடும், அவரின் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே கோவை செல்வராஜ் விலகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் ஓபிஎஸ் அணியில் இருந்து ஒரு விக்கெட் விழுந்திருப்பதால், எடப்பாடி பழனிசாமி அணி உற்சாகத்தில் இருக்கிறது.

மேலும் படிக்க | ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக - திருமாவளவன் வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News