ஒலிம்பிக் போட்டியில் இலக்கு வைத்து வெற்றி பெறுவேன்: மாரியப்பன் தங்கவேல்

ஒலிம்பிக் சாம்பியன்களை மாணவர்கள் மத்தியில் பேச செய்து விளையாட்டில் ஊக்கம் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது: மாரியப்பன் தங்கவேல். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Feb 24, 2022, 04:09 PM IST
ஒலிம்பிக் போட்டியில் இலக்கு வைத்து வெற்றி பெறுவேன்: மாரியப்பன் தங்கவேல் title=

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் இரண்டு மீட்டர் இலக்கு வைத்து வெற்றி பெறுவேன் என பாரா ஒலிம்பிக் சாம்பியன் மாரியப்பன் தங்கவேல் கூறியுள்ளார். 

மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க இளைஞர்கள் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகமும் இணைந்து நடத்தி வரும் ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 

அதன் அடிப்படையில் சேலம் தனியார் பள்ளியில் ‘மீட் தி சாம்பியன்’ என்ற நிகழ்ச்சி  இன்று நடைபெற்றது. தனியார் பள்ளியின் முதல்வர் ஹோலி ஜோசப் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரா ஒலிம்பிக்  மாரியப்பன் தங்கவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

மாரியப்பனுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதனைத்தொடர்ந்து மாரியப்பன் பள்ளி மாணவ மாணவிகளிடையே கலந்துரையாடினார்.

அப்போது விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும் மாணவ மாணவிகள் விளையாட்டில் சிறந்து விளங்க பயிற்சி எடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் விளையாட்டு துறையில் மாணவ மாணவிகள் அதிக அளவில் பங்கேற்பதற்கு கடுமையான முயற்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் மாணவியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மாரியப்பன் பரிசுகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மாரியப்பன், “ஒலிம்பிக் சாம்பியன்களை மாணவர்கள் மத்தியில் பேச செய்து விளையாட்டில் ஊக்கம் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது.

மேலும் படிக்க | ஓட்டுக்காக எம்எல்ஏ மனைவி கொடுத்த சேலைகளை குப்பையில் வீசிய வாக்காளர்கள் 

இதுபோன்று மாணவர்கள் மத்தியில் பேசுவதன் மூலம் அவர்களுக்கு ஊக்கம் கிடைத்து வருங்காலத்தில் சாதிக்க முடியும். கிராமப்புற மாணவர்களும் நன்கு பயிற்சி பெற இயலும். தற்போது பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் இந்திய பெற்றிருக்கும் நிலையில், வருங்காலத்தில் அது நூறு பதக்கங்களாக அதிகரிக்கும்.” என்றார்.

தன்னைப் பொறுத்தவரையில் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் பயிற்சி தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார். ‘முதலில் ஆசிய விளையாட்டு, அடுத்தது உலக சாம்பியன் விளையாட்டு போன்றவை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பேன். பின்பு நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் இரண்டு மீட்டரை இலக்காகக் கொண்டு அதற்கான  பயிற்சியில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்’ என்றார் அவர். 

சேலத்தில் அகாடமி பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இளைஞர்களுக்கு  பயிற்சி வழங்கப்படும்.

மத்திய, மாநில அரசுகள் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. சேலத்தில் சிந்த்தடிக் மைதானம் அமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ராமேஸ்வரத்தில் 108 அடி உயரத்தில் ஹனுமான் சிலை நிறுவத்திட்டம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News