PM Modi Visit, Chennai Traffic Diversion: மக்களவை தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்களது தேர்தல் பணியை தொடங்கி உள்ளன. அந்த வகையில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவும் தீவிரமாக தனது தேர்தல் பணியை தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்கு வர இருக்கிறார்.
ஆறு நாள்களுக்கு முன்னர்தான், 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருந்தார் பிரதமர் மோடி. அப்போது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தின் இறுதிவிழாவில் பங்கேற்றார். தொடர்ந்து, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி என தென்மாவட்டங்களுக்கு பயணம் செய்திருந்தார்.
அடிக்கடி தமிழகம் வரும் பிரதமர்
தென்னிந்தியாவில் தங்களின் வேர்களை பரப்ப வேண்டும் என நோக்கில் பிரதமர் மோடி அடிக்கடி வருகை தருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், ஜனவரியிலும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன் மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்து ராமேஸ்வரத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து அயோத்திக்கு சென்றார், பிரதமர் மோடி. இப்படி தமிழகத்திற்கு அடிக்கடி வருகை தருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில், நாளைய பிரதமரின் வருகையைும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மார்ச் 4ஆம் தேதி அன்று (நாளை) நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறும் 'தாமரை மாநாடு' பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.
அதிக நெரிசலுக்கு வாய்ப்பு?
இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அக்கட்சியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணா சாலை, ஒய்.எம்.சி.ஏ நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
The Hon’ble Prime Minister of India will be visiting Chennai to participate in the Public Meeting to be held at 04.03.2024 on YMCA Nandanam at 1700 hrs.
Political party leaders and party people are expected to attend the meeting.
Road users are… pic.twitter.com/a5SI6El5Zf
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) March 3, 2024
பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் சில சாலைகளில் தடை செய்யப்படும்" எனவும் கூறப்படுகிறது.
எந்தெந்த சாலைகளில் போக்குவரத்துக்கு தடை?
அதாவது, மத்யகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை, இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு, மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை, அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு, விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி),
அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை, தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை ஆகியவை நாளை பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணிவரை தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி டிரான்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ