அரசியல் கட்சி தொடங்குவாரா? விரைவில் முடிவு....ரஜினிகாந்த் பேட்டி

அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்க உள்ளதாக ரஜினிகாந்த் கூறினார்.

Last Updated : Nov 30, 2020, 02:32 PM IST
    1. நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என அவரது ரசிகர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    2. கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் பெயரில் வெளியான பரபரப்பு அறிக்கை தமிழக அரசியல் களத்தை மேலும் சூடாக்கியது.
    3. கொரோனா அச்சத்திற்க்கு மத்தியில், கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை.
அரசியல் கட்சி தொடங்குவாரா? விரைவில் முடிவு....ரஜினிகாந்த் பேட்டி title=

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் நீடித்து வந்தது. அந்தவகையில் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். இதனால் சஸ்பென்சை ரஜினி இன்று உடைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் நிலவரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பின் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ’அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன்’ என்று கூறியுள்ளார். மேலும் ’நான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக நிர்வாகிகளும் கூறியுள்ளனர் என ரஜினிகாந்த் (Rajinikanth) தெரிவித்தார். 

ALSO READ | அரசியல் களத்தில் #ரஜினி... 234 இடங்களில் போட்டியிட உள்ளதாக தகவல்!!

Rajinikanth launches Android mobile app Rajini Mandram and a web page to  allow followers to join his fan club - India News , Firstpost

நிர்வாகிகள் தங்கள் பகுதி நிலவரங்கள் மற்றும் தங்களின் கருத்துக்களை ரஜினியுடன் (Rajini Makkal Mandram) பகிர்ந்துகொண்டனர். மேலும் முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் போட்டியிட வேண்டும் என்ற கருத்தையும் பலர் முன்வைத்துள்ளனர். 

 

 

முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் ரஜினியின் தற்போதைய உடல் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என 3 வருடமாக தெரிவித்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வரவுள்ளதாக ரசிகர்கள் முன்பு அறிவித்தார் ரஜினிகாந்த். அவரது அறிவிப்புக்கு பிறகு நாடாளுமன்ற (Parliament) தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 20 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்து விட்டது. 1996ஆம் ஆண்டு முதலே ரஜினியை  (Rajini Makkal Mandram) அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கின்றனர். ரஜினிதான் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்காமலேயே இருந்தார்.

அரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்? நவம்பர் 30 முக்கிய ஆலோசனை!

இந்நிலையில் தற்போது அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

ALSO READ | மு.க. அழகிரி மற்றும் நடிகர் ரஜினியை சந்திக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3lo

Trending News