புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தமிழர் பாரம்பரியத்துடன் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
புதுச்சேரி (Puducherry) ஆளுநர் மாளிகை சார்பில் முதல்முறையாக பொங்கல் விழா இன்று காலை நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமை வகிக்க முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
உயரதிகாரிகள் பலரும் வேட்டி மற்றும் பட்டுப்புடவை அணிந்து வந்து விழாவில் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகை வாசலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் மாட்டு வண்டி மற்றும் உழவு தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு முறுக்கு, அதிரசம், பானையில் வைத்த பொங்கல் ஆகியவை அளிக்கப்பட்டன. தொடர்ந்து மாணவ- மாணவியரின் சார்பில் தமிழ் பாரம்பரிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முந்தைய காலங்களில் மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. ஆனால் தற்போது குக்கர் பொங்கலாக உள்ளது. எனவே பாரம்பரியைத்தை நினைவு கூறும் வகையில் மண்பானையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதாகவும், மேலும் மண்பாண்ட கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மண்பாண்டத்தில் பொங்கல் வைத்துள்ளோம் என்றும் கூறினார்.
ALSO READ | Pongal 2022: திகட்டாமல் தித்திக்கும் தைப்பொங்கல் கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடங்கள்
மேலும் அனைவரும் பாதுகாப்பான பொங்கல் கொண்டாட (Pongal Festival) வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக இந்த பொங்கல் கொண்டாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் முதன்முறையாக கவர்னர் மாளிகையில் பொங்கல் கொண்டாடப்பட்டதாகவும், தமிழ் விளையாடும் இடமாக, தமிழர் ஆளுநராக உள்ள ராஜநிவாசில் தைத்திருநளை முன்னிட்டு தமிழர் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, 'கொண்டாட்டங்களை எச்சரிக்கையாக கொண்டாட வேண்டும் என்பதற்காக இங்கு கொண்டாடி உள்ளோம். அறைக்குள் கொண்டாடாமல், வெட்டவிளியில் சமூக இடைவெளியுடன் கொண்டாட வேண்டும். ஊரடங்கு போடுவதைவிட கொரோனாவை எப்படி அடக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். காணும்பொங்கல் உறவினர்களுடன் உறவு கொண்டாடும் பொங்கலாக இருக்க வேண்டுமே தவிர கொரோனாவுடன் உறவு கொண்டாடும் பொங்கலாக இருக்க கூடாது' என கூறினார்.
ALSO READ | Pongal: கோலம்… இது கலைக்கோலம்… கலாச்சாரக் கோலம்…
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR