தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இன்றும் பொங்கல் பரிசு!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 ஞாயிற்றுக்கிழமையான இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

Last Updated : Jan 12, 2020, 12:54 PM IST
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இன்றும் பொங்கல் பரிசு! title=

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 ஞாயிற்றுக்கிழமையான இன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த நவம்பர் 29 அன்று சென்னையில் நடந்த பொங்கல் பரிசு பேக்கேஜிங் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi k Palaniswami) பொங்கல் பரிசு வழங்குவதை தொடங்கி வைத்தார். அன்று முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அரிசி பெறும் 2.5 கோடி அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000. நியாய விலைக்கடைகளில் இலவச பொங்கல் பரிசு மூட்டைகளை வழங்க தமிழக அரசு நிர்ணியம் செய்துள்ளது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அதனுடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் இருக்கும். அன்று முதல் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு (Pongal Gift) வழங்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் பொங்கல்பரிசு வழங்கப்படவில்லை.

அந்தவகையில் அந்த ஆண்டு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி (நாளை) வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மக்கள் வரிசையாக நின்று, ஆர்வத்துடன் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் 1,000 ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது. 

தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 85 சதவிகிதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு நாளை வரை மட்டுமே பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News