ஆபாச வீடியோ சர்ச்சை: வெறும் வதந்தி- சீமான் விளக்கம்

Last Updated : Mar 29, 2017, 01:42 PM IST
ஆபாச வீடியோ சர்ச்சை: வெறும் வதந்தி- சீமான் விளக்கம் title=

சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்-அப்பில், கடந்த இரண்டு நாட்களாக ஆபாச வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

அந்த ஆபாச வீடியோவில் இருக்கும் ஆண் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்ற வதந்தியும் பரவி வருகிறது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

எனது கட்சியில் உள்ள எனது பிள்ளைகள் ஒருபோதும் இப்படிப்பட்ட இழிவான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். நான் எனது பிள்ளைகளை மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு சென்றுவிடாமல் இருக்கும் வகையில் கட்டுப்பாடுடன் வளர்த்து வருகிறேன், எனவே நிச்சயமாக சொல்கிறேன், அது என் கட்சியை சேர்ந்த பிள்ளை இல்லை.

கடந்த தேர்தலின் போது இதேபோல நாம் தமிழர் கட்சிக்கு கலங்கும் விளைக்கும் வகையில் ஒரு வதந்தியை பரப்பினார்கள். தற்போது ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை கருத்தில் கொண்டு திட்டமிட்டு இத்தகையை ஆபாச வீடியோவை பரப்பு வருகிறார்கள்.

அந்த வீடியோவில் உள்ள வீரவணக்கம் என்ற வாசகம் எழுதியுள்ள போஸ்டர் எங்களுடையதல்ல. எப்போதும் தலைவர் பிரபாகரன் ஒரு புறமும், நான் மறுபுறமும்  நிற்பது போன்ற போஸ்டரை நாங்கள் அச்சடித்ததில்லை. அதேபோல விளக்கை போஸ்டரின் மத்தியில் இருக்கும்படியும் நாங்கள் போட்டதில்லை. விளக்கு ஒரு புறம் ஒருக்கும் தலைவர் ஒருபுறம் இருப்பார், அவர் கீழே நான் வணங்குவது போல தான் போஸ்டரை அச்சடித்திருக்கிறோம், இந்த போஸ்டர் நாங்கள் அச்சடித்ததில்லை. 

எங்கள் மீது கலங்கத்தை ஏற்படுத்தவும், எங்கள் தம்பிகளின் கவனத்தை சிதறடித்து தேர்தல் பணியில் அவர்கள் சோர்வடையும் வகையிலேயே இந்த ஈனச்செயலை செய்துள்ளார்கள். எனவே, இந்த ஆபாச வீடியோ திட்டமிட்ட சதி. இது குறித்து சைபர் க்ரைமில் நாங்கள் புகார் அளித்துள்ளோம். 

அவர்களும் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்தது யார் என்பதை விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று கூறினார்.

Trending News