‘அவரது தாய் மீது அவர் அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்’: EPS பற்றி Raghava Lawrence

திரைப்பட நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக ஊடக பக்கத்தில் முதல்வரின் தாயாரது மறைவு குறித்து இரங்கல் தெரிவித்தார். 

Last Updated : Oct 13, 2020, 06:46 PM IST
  • தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியின் தாய் தவுசாயம்மாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.
  • . கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
  • முதல்வரது தாயாரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
‘அவரது தாய் மீது அவர் அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்’: EPS பற்றி Raghava Lawrence  title=

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியின் (K Palanisamy) தாய் தவுசாயம்மாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93. கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். முதல்வர் தனது தாய்க்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக சேலத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு விரைந்தார்.

முதல்வரது தாயாரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, தொலைபேசியில் தொடர்புக்கொண்டு ஆறுதல் கூறிய துணைமுதல்வர் O Panneerselvam நேரில் ஆறுதல் கூற சேலம் சென்றார்.

ALSO READ: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் உடல் தகனம்..!

திரைப்பட நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) தனது சமூக ஊடக பக்கத்திற்கு தனது இரங்கலை முதல்வருக்கு தெரிவித்தார். அதில் அவர், “எங்கள் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஐயாவின் தாயார் தவூசயம்மாளின் மறைவு பற்றிய செய்தியைக் கேட்டதும் எனக்கு வருத்தமாக இருந்தது. கடந்த ஆண்டு நான் முதல்வரைச் சந்தித்தபோது, ​​அவர் நான் என் அம்மாவுக்கு ஒரு கோவில் கட்டியதைப் பாராட்டினார். மேலும் அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக என்னுடன் உரையாடியதோடு தனது தாயை எவ்வளவு நேசித்தார் என்பதையும் பகிர்ந்து கொண்டார். இது அவருக்கு மிகப்பெரிய இழப்பு என்று எனக்குத் தெரியும். அவரது தாயின் ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்க நான் பிரார்த்திக்கிறேன்." என்று எழுதியுள்ளார்.

முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் (Rajinikanth) முதல்வரை தொலைபேசியில் அழைத்து அவரது தாயாரது மறைவுக்கு ஆறுதல் கூறியதாகத் தெரிகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News