Rain Alert: தென்மேற்குப் பருவமழை தீவிரம்: தமிழகம் முழுவதும் பரவலாக மழை

Rain Updates: தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த மழை; தமிழக நதிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 16, 2022, 01:27 PM IST
  • தென்மேற்கு பருவமழையால் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
  • மாநிலம் முழுவதும் மழை பரவலாக பெய்து வருகிறது
Rain Alert: தென்மேற்குப் பருவமழை தீவிரம்: தமிழகம் முழுவதும் பரவலாக மழை title=

TN Weather Today: நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் அடைமழை நீடிக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காற்றின் வேகம்: 6.17 கி.மீ/மணி;  வெப்பநிலை அதிகளவு: 36.02°C ஆகவும், குறைந்தபட்ச அளவு  27.14°C ஆகவும் இருக்கும் என்றும் நாள் முழுவதும் மேகமூட்டமாக காணப்படும் என்றும் வானிலை முன்னெச்சரிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், தமிழகம் முழுவதிலும் மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், மாநிலத்தின் பல மாவட்டங்களிலும், குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நிரம்பிய அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கர்நாடகாவில் பெயது வரும் கனமழையால் தமிழக நதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், நதிகளின் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே நதிகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியில் அனுப்பப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக்காற்று வீடும் என்றும், அது 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு குறித்து வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி: இழப்பீடு 60000 ரூபாயாக உயர்ந்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News