Rajnikanth: அபூர்வ ராகங்களாய் மலர்ந்த ’அண்ணாத்த’யின் அரசியல் மூன்றுமுகம்

நடிகர் ரஜினிகாந்த், வில்லனாய் அறிமுகமாகி, குணச்சித்திர நடிப்பால், நகைச்சுவையால் நாயகனாய் உயர்ந்த சூப்பர் ஸ்டார். அவரது ஆன்மீக அரசியலை பார்க்கக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீர் மகிழ்ச்சியைக் கொடுத்தார். ஆனால் அது கானல்நீரான சோகம் அறிக்கையாய் வெளியானது....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 29, 2020, 02:42 PM IST
  • நடிகர் ரஜினிகாந்த், வில்லனாய் அறிமுகமாகி, நடிப்பால் நாயகனாய் உயர்ந்த சூப்பர் ஸ்டார்
  • ஆன்மீக அரசியலை பார்க்கக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீர் மகிழ்ச்சியைக் கொடுத்தார்
  • திடீர் மகிழ்ச்சியை புரட்டிப் போட்டது கொரோனா வைரஸ் பாதிப்பு
Rajnikanth: அபூர்வ ராகங்களாய் மலர்ந்த ’அண்ணாத்த’யின் அரசியல் மூன்றுமுகம்   title=

புதுடெல்லி: அரசியலில் ‘படையப்பா’வாக கலக்குவார் என்று எதிர்பார்த்த நடிகர் ரஜினிகாந்த் ‘குசேலனாய்’ மாறிய சோகத்தை அவரது ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்? இது அவர்களின் ஆசையையும் வாழ்நாள் விருப்பத்தையும் கானநீராக்கிவிட்டது.

ரஜினி அரசியலுக்கு (Politics) வருவாரா என்ற கேள்விக்கு, ‘சரியான நேரத்தில எண்ட்ரி கொடுப்பார்’ என்று இன்றுவரை அனைவரும் உறுதியான நம்பிக்கையுடன் இருந்தனர். 
அனைவரின் நம்பிக்கையையும் பூர்த்தி செய்யும் வகையில் சில தினங்களுக்கு முன்னதாக தனது அரசியல் பிரவேச அறிவிப்பையும் வெளியிட்டார் சிவாஜி ராவ் கைக்வாடு (Shivaji Rao Gaekwad) என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

ஆனால் ’சிவாஜி த மாஸ்’, ‘எம்.ஜி.ஆர்’ ஆக மாற எடுத்த முடிவை சில நாட்களிலேயே மாற்றிக் கொண்டார். ஏற்கனவே தனது உடல்நிலை (Health Condition) கோளாறுகளால் மருத்துவர்கள் (Doctors) கவனமாக இருக்க சொல்லியிருப்பதையும் தனது அரசியல் பிரவேச அறிவிப்பின் போது வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படிச் சொன்ன சில நாட்களிலேயே ரத்தக் கொதிப்பு (Blood Pressure), ரஜினியின் அரசியல் பாதையில் முள்ளும் மலருமாக இடறிவிட்டது.

ஆறுமுறை தமிழக அரசு (Tamil Nadu Government) விருதுகளைப் (Awards) பெற்ற சிறந்த நடிகர், தமிழகத்தின் சிறந்த முதலமைச்சராக பணியாற்ற முடியாமல் போனது சோகம். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்த பலரின் கனவு, பகல்கனவாகவே மாறிவிட்டது என்பதை இறுதியாக உறுதி செய்துவிட்டது ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை.

ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்தபடி அதிக சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்த சூப்பர் ஸ்டரால் (Superstar), தமிழக அரசின் முதலமைச்சராக ‘ஒற்றை’ ரூபாய் கூட சம்பளம் வாங்க முடியாமல் போனது காலத்தின் கட்டாயம்.

Also Read | Rajinikanth அரசியலில் நுழைவது கானல்நீரா?

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்? கஜினி (Gajini) முகமதுவைப் போல ரஜினி மனம் தளராதவர் என்றாலும், படையெடுப்புகளை தீர்மானிப்பது காலம் தானே? துணிச்சலாக அரசியலில் களம் இறங்கிய விஜயகாந்த் (Vijayakanth), தொடக்கத்தில் நன்றாக செயல்பட்டாலும், அவரது உடல்நிலை சீர்கெட்டுப் போனதல், இன்று அவரது அரசியல் நடவடிக்கைகளும் முடங்கி விட்டதையும் பார்க்கிறோம். இரும்புப் பெண்மணியாக உலா வந்த ஜெயலலிதவும் (Jayalalitha) இறுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அனைவரையும் ஏமாற்றிவிட்டு போகச் செய்ததும் ஆரோக்கியம் (Health) என்ற அடிப்படை விஷயம் தான்.

ரஜினி (Rajinikanth) அரசியலுக்கு வருவாரா என்பது ’புவனா ஒரு கேள்விக்குறி’ திரைப்படத்தைப் (Cinema) போல என்றுமே கேள்விக்குறியாக இருந்தது, சில நாட்களுக்கு முன் அதற்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்தாலும், இப்போது அது ஆச்சரியக்குறியாக மாறிவிட்டது. காலம் அந்த கேள்விக்குறியை ஆச்சரியக்குறியாக மாற்றுவதற்கு கொரோனா (Coronavirus) என்ற கொடுங்கால வைரஸ் தான் காரணம். யாருக்கும் அஞ்சாத ரஜினியையும் பின்வாங்க வைத்த தொற்றுநோய், அவரது ரசிகர்களின் மனதிலும் சோகத்தை தொற்றவைத்துவிட்டது.

Also Read | கட்சி தொடங்கவில்லை; அரசியலுக்கு வரமுடியவில்லை, மன்னியுங்கள்!  

அரசியலில் ’பாட்ஷா’வாக வலம் வர வேண்டியவரை, ’எங்கேயோ கேட்ட குரலாக’ மாற்றியது ’ஸ்ரீராகவேந்தர’ரின் விருப்பமா? இல்லை ’பாபா’வின் கட்டளையா?
மக்களுக்கு ’வேலைக்காரனாக’ பணியாற்ற விரும்பிய ’சிவாஜி’க்கு, ’குரு சிஷ்யன்’கள் கிடைத்தாலும் அவரால் ’ராஜாதி ராஜா’வாக முடிசூட முடியவில்லை. ’முத்து’ திரைப்படம் பல உலக சாதனைகளை செய்தது, ஆனால் தமிழக அரசியலில் (Politics) மாற்றத்தை கொண்டு வர விரும்பிய, ரஜியின் ஆன்மீக அரசியலை பார்க்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்கவில்லை.

’தளபதி’யாய், ’அண்ணாமலை’யாய், ’மன்னனாய்’ மாறவேண்டிய ’நல்லவனுக்கு நல்லவன்’, இறுதியில் ’நான் மகான் அல்ல’, சாதாரண மனிதனாய் நோய் என்னை பின்னுக்கு இழுக்கிறது என்று இந்த ’எந்திரன்’ ’தர்மத்தின் தலைவனாய்’ மாறிவிட்டார்.

’ஆயிரம் ஜென்மங்கள்’ எடுத்தாலும் தமிழகமே எனது தாய்வீடு என்று கூறும் ’நல்லவனுக்கு நல்லவன்’, ’இளமை ஊஞ்சலாடும்’ காலத்தில் அரசியலுக்கு வந்திருந்தால் அவருக்கு பின்னடைவே இருந்திருக்காது.

Also Read | திரையில் இருந்து அரசியலுக்கு சென்ற பிரபலங்களுடன் 'அண்ணாத்த'

’அலாவுதினும் அற்புத விளக்கும்’ இன்று இருந்திருந்தால், ரஜினியின் ஆன்மீக அரசியல் என்ற ’தர்மயுத்தம்’ தமிழக மக்களுக்கு பயன்பட்டிருக்கும். 
’ஆறிலிருந்து அறுபது வரை’ என்பதை ரஜினி (Rajinikanth) சற்று நினைத்துப் பார்த்திருந்தால், ’மிஸ்டர் பாரத்’ பற்றி பாரத மக்கள் ‘நினைத்தாலே இனிக்கும்’ அனுபவத்தை ஜானி கொடுத்திருக்கலாம்.

’தில்லுமுல்லு’ செய்து அரசியலுக்கு வருவார்கள் என்று சொல்லும் காலகட்டத்தில், நேர்மையாக அரசியல் செய்வேன் என்று சொன்ன ’போக்கிரி ராஜா’, ’தனிகாட்டு ராஜா’வாக உலா வருவார் என்று பொதுமக்கள் ஏங்கினார்கள். ஆனால், தமிழகத்தின் (Tamil Nadu) பிற அரசியல்வாதிகளுக்கு அவருக்கு ’மாப்பிள்ளை’ மரியாதை கிடைத்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டு பூனையாய் ’கர்ஜனை’ செய்தது ‘எங்கேயோ கேட்ட குரலாய்’ அபஸ்ரவமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

என்னை மன்னித்துவிடுங்கள், அரசியலுக்கு வரமுடியவில்லை என்று மக்களிடம் மன்னிப்புக் கேட்ட ரஜினிகாந்த், ‘நான் மகான் அல்ல’ என்று சொன்னாலும்,  இல்லை, நீ ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ நலமாய் வாழ்க என்று இப்போது அரசியல்வாதிகள் (Politicians) நலம் விசாரிக்கின்றனர்.

Also Read | ஐஸ்வர்யா ராய் முதல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரை ரஜினிகாந்தின் நாயகிகள் 

’ராஜா சின்ன ரோஜா’ ரஜினிகாந்த், பத்ம பூஷனாய் (Padma Bhushan), பத்ம விபூஷனாய் (Padma Vibhushan) விருதுகளால் பெருமைப்படுத்தப்பட்டாலும், அரசியலில் அதிரடியாய் ‘படையப்பா’வாய் காலடித் தடத்தை பதிக்க முடியவில்லை என்பது தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, ஜப்பான் நாட்டு ரசிகர்களின் மனதில் முத்துவாய் இடம் பிடித்த ’அபூர்வராகமாய்’ ஒலிக்கும் ரஜினிக்கும் சோகமான விஷயம் தான்…

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News