ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை!!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

Last Updated : Nov 28, 2017, 10:39 AM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை!! title=

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் ரிப்பன் மாளிகை அலுவலகத்தில் 3 உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 1913 மற்றும் 1800-4257012 என்ற இலவச தொலைபேசி எண்கள் வாயிலாக புகார் தெரிவிக்கலாம். என மாவட்ட தேர்தல் அலுவலர்  செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

Trending News