முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து பல்வேறு சர்சரவுகளுக்கு பிறகு தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
வரும் டிசம்பர் 21-ம் நாள் இந்த இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு சூடுபிடிக்க துவங்கியுள்ளது.இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி, திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக முன்னதாகவே அறிவித்துவிட்டன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் அந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக ஆர்.கே.நகர் பகுதியில் வகிக்கும் குழந்தைகளை வைத்து டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஓட்டு போடும் படி அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
வீடியோ:-
எவ்வித எதிர்பார்ப்புமின்றி,பாசத்தின் வெளிப்பாடாய் வெளிவரும் இது போன்ற நிகழ்வுகள்தான் ஒரு தலைவனை தன் மக்களுக்காக எதையும் செய்ய வைக்கும்!!
தமிழகத்தின் எதிர்காலத்திற்க்கு நன்றி!!! pic.twitter.com/RwXZi7OLoh— Office Of TTV (@OfficeofTTV) December 15, 2017