கண்களை கட்டி கருப்பு முகமூடி அணிந்து இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் ஓட்டிய மேஜிக் கலைஞர்

கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் பிரபல மேஜிக் கலைஞர் தயா கண்களை கட்டி கொண்டு தலையில் முகமூடி அணிந்தபடி ராயல் கேர் மருத்துவமனையின் இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கினார்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 30, 2024, 01:51 PM IST
  • சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
  • பிரபல மேஜிக் கலைஞர் தயா பங்கேற்றார்.
  • ராயல் கேர் மருத்துவமனையின் இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கினார்.
கண்களை கட்டி கருப்பு முகமூடி அணிந்து இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ் ஓட்டிய மேஜிக் கலைஞர் title=

சாலை விபத்து மற்றும் ஹெல்மட் அணிவதன் அவசியம்  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையில்  கண்களைக் கட்டிக் கொண்டு,  மேஜிக் கலைஞர், கருப்பு முகமூடி அணிந்தபடி இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் ஓட்டினார்.

கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் பிரபல மேஜிக் கலைஞர் தயா கண்களை கட்டி கொண்டு தலையில் முகமூடி அணிந்தபடி ராயல் கேர் மருத்துவமனையின் இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கினார். போக்குவரத்து நெரிசல்  நிறைந்த காந்திபுரம் பகுதியில் இருந்து க்ராஸ்கட் சாலை, வடகோவை வழியாக ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கம் வரை சென்றார்..

முன்னதாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மருத்துவர் மணி செந்தில் குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்..மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,கண்களை கட்டி கொண்டு முகமூடி அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவது என்பது தகுந்த பயிற்சி இருந்தால் சாதிக்கலாம் என்று கூறிய அவர், ஆனால்  நல்ல பயிற்சிகள் இருந்தாலும் ஹெல்மட் அணியாமல், மது அருந்தி வாகனம் இயக்கினால் , எவ்வளவு பயிற்சி இருந்தாலும், அது பாதுகாப்பானது அல்ல என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்பதற்காக இது போன்ற நிகழ்வு நடைபெறுவதாக தெரிவித்தார்.

மேலும் படிகக் | ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவது முற்றிலும் பொய்: புகழேந்தி

குறிப்பாக இளைஞர்களுக்கு இது போன்ற விழிப்புணர்வு அதிகம் ஏற்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவது மிக முக்கியம் என தெரிவித்தார். மேலும் பெற்றோர்களும் பதினெட்டு வயது நிரம்பாதவர்களுக்கு வாகனங்கள் வாங்கி கொடுப்பதை நிறுத்த வேண்டும் என கேட்டு கொண்டார் அவர், இதை மீறி இது போன்ற பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளோர் வாகனங்கள் இயக்கினால் அவர்களது பெற்றோர்கள் மீதும் போக்குவரத்து சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

மேலும் படிக்க | மீண்டும் சிறை செல்லும் டிடிஎப் வாசன்? பிணையில் வரமுடியாத படி வழக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News