ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவது முற்றிலும் பொய்: புகழேந்தி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவதும் முற்றிலும் பொய்யானதாகும் என தூத்துக்குடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரிடம் தெரிவித்தார்.   

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 30, 2024, 11:15 AM IST
  • ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவது முற்றிலும் பொய்.
  • ரஜினி போல் இல்லாமல் விஜய் நல்ல நோக்கத்தோடு அரசியலுக்கு வரவேண்டும்.
ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவது முற்றிலும் பொய்: புகழேந்தி title=

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பேசி வருகின்றனர். இதனை முற்றிலும் தவறானது, அவர் ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவதும் முற்றிலும் பொய்யானதாகும் என தூத்துக்குடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பேசி வருகின்றனர். 

இதனை முற்றிலும் தவறானது. அவர் ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவதும் முற்றிலும் பொய்யானதாகும். அவர், அனைத்து மதத்தினருக்கும், சாதியினருக்குமான தலைவராக இருந்தார். அவரைப் பற்றி இவ்வாறு கூறுவதை எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஒருவேளை இந்துத்துவா தலைவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோ என சந்தேகம் உள்ளது என்றார்‌.

மேலும் படிக்க | மீண்டும் சிறை செல்லும் டிடிஎப் வாசன்? பிணையில் வரமுடியாத படி வழக்கு!

ராமநாதபுரத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெற்றிக்காக காத்திருக்கிறோம் அவர் மாபெரும் வெற்றியை பெறுவார் என நம்புகிறோம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒரு இடத்திலும் வெற்றி பெறப் போவதில்லை. அவர் அடுத்த முறை தூத்துக்குடிக்கு வரும்போது பொதுச் செயலாளராக இருக்க மாட்டார் என தெரிவித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கான திட்டங்கள் போன்றவைகளை பாராட்டுவதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால் ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு என்பது முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன். 

மின்சார துண்டிப்பு இல்லாமல் இருப்பது உங்கள் கடமை மின்சார துண்டிப்பு இல்லாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் பேசிய அவர், கோடநாடு கொலை வழக்கில் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை ஊழல் குற்றச்சாட்டிலும் கைது செய்யப்படவில்லை இதை சொல்வதால் முதல்வர் கோவித்துக் கொண்டாலும் பரவாயில்லை கோடநாடு கொலை வழக்கு 3 1/2 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே சென்று விட்டது ஒருவரை கூட கைது செய்யப்படவில்லை எதற்காக வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. 

சவுக்கு சங்கரை பொறுத்தவரையில் என்ன கோபம் என்றால் எங்களைப் பற்றி கூட ஒரு பதிவு போட்டார. நாங்கள் அதை கண்டு கொள்ளவில்லை. சவுக்கு சங்கர் போல் ஆட்கள் பேசுவது முற்றிலும் தவறு மிகவும் மோசமான தவறு என்றார். 

மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அன்போடு அழைக்கிறேன் ஆனால் ரஜினி போல் இல்லாமல் நல்ல நோக்கத்தோடு வரவேண்டும் என புகழேந்தி தெரிவித்தார். 

மேலும் படிக்க | அரசு பள்ளியின் பூட்டை உடைத்து மோட்டர் சாதனங்களை திருடிய போதை ஆசாமிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News