நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையிலான சொத்துப் பிரச்சினை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை மோகன் பாபு விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தபோது, அதில் இருந்து ஐயப்ப பக்தர்களின் மதிய உணவில் போலீஸார் சிக்கன் கறியைக் கலந்து வழங்கியதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே நிலத்தகராறில் தம்பி மற்றும் அவரது மைத்துனரைக் கொலை செய்த அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே கட்டுமானத் தொழிலாளியை மதுபோதையில் சக நண்பரே இரும்பு ராடால் அடித்து கொலை செய்யும் அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாகவும், அவரைத் தேடி தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Amaran Movie: நெல்லை அமரன் படம் ஓடிய திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; திரையரங்கை பார்வையிட வந்த இந்து முன்னனி அமைப்பினரை போலிசார் தடுத்ததால் பரபரப்பு.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்று நோய் பிரிவு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்திய இளைஞர்; தனது தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி விக்னேஸ்வரன் என்பவர் வெறிச்செயல்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவருக்கு சிகிச்சை; மருத்துவரை கத்தியால் குத்திய பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரணை.
பொள்ளாச்சி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இவ்விபத்து குறித்து தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நான் வைத்திருந்த 250 கிராம் உருளைக்கிழங்கு திருடப்பட்டது என்று உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த நபர் போலீஸாருக்கு அழைப்பு விடுத்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் சோதனை என தகவல்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.