Video: மின்சாரம் தாக்கி யானை பலி... உயிரிழந்த நேரடி காட்சிகள் வைரல்

Elephant Death Viral Video: குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆண் யானையை வனப்பகுதிக்கு விரட்டிச்செல்லும் போது தாழ்வான  மின்சார கம்பியில் உரசியதில், மின்சாரம்  பாய்ந்து யானை உயிரிழந்தது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 18, 2023, 04:48 PM IST
  • மின்சாரம் தாக்கும் வீடியோ அங்குள்ளவர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
  • அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Video: மின்சாரம் தாக்கி யானை பலி... உயிரிழந்த நேரடி காட்சிகள் வைரல் title=

Elephant Death Viral Video: கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா பகுதியில் இருந்து 100 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. அந்த யானைகள் கடந்த மாதம் தனித் தனிக்குழுக்களாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து  உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகள், விளைநிலங்களுக்கு வருகின்றன. 

இதனால், விளைநிலங்களில் பயிர்களை சேதத்திற்கு உள்ளாகுகின்றன. விவசாயிகள் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாத்துகொள்ள வயல்வெளிகளை சுற்றிலும் அனுமதியின்றி மின் வேலி அமைத்து வருகின்றனர். இந்த மின் வேலிகளில் சிக்கி, யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

அந்த வகையில், கடந்த வாரம் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மூன்று யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிந்தன. அதன் இரண்டு குட்டிகள் தாய் யானையை பிரிந்து வனப்பகுதியில் சுற்றி திரிந்தது. இதே போல் ஒரு குட்டி யானை கிணற்றில் விழுந்தது. பின்னர், அதனை உயிருடன் மீட்டனர்.

மேலும் படிக்க | குன்னூரில் முகாமிட்டிருக்கும் காட்டு யானைகள்... பீதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்!

தர்மபுரி மாவட்டத்தில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று தர்மபுரி மாவட்டம்  கிருஷ்ணாபுரம் அருகே ஊருக்குள் ஒற்றை ஆண் யானை புகுந்தது. அந்த யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். அப்போது கம்பைநல்லூர் அடுத்த  கெலவள்ளி அருகே ஏரி கரையில் ஏறும்போது, அந்த வழியாக சென்ற தாழ்வான மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி அந்த ஆண் யானை சம்பவ இடத்திலியே உயிரிழந்தது.

இதனையடுத்து வனத்துறையினர் உயிரிழந்த யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நேரடி காட்சிகள் அங்குள்ளவர்களால் செல்போனில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | மக்னா யானையை கொண்டு வர மக்கள் எதிர்ப்பு! வனத்துறை அலுவலகத்திற்கு திரும்பிய முரட்டு விலங்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News