கோவை: ஜனாதிபதி வழங்கிய அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி என ஈஷா அறக்கட்டளையின் சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். 16-வது இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்களை டெல்லி ராஷ்டிரபதி பவனில் மரியாதை நிமித்தமாக சத்குரு சந்தித்தார். இது குறித்து சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குடியரசுத் தலைவருடன் அவரது சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளன.
சத்குருவின் டெல்லி பயணம் நிறைவானதாக இருந்ததாக கூறப்படுகிறது.
A great honor & privilege to meet with Hon’ble President Smt. #DroupadiMurmu. Deeply grateful for the warmth & reception at Rashtrapati Bhavan.
Much regard and blessings. -Sg@rashtrapatibhvn pic.twitter.com/HpUkfrl1bU— Sadhguru (@SadhguruJV) August 30, 2022
'மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களை சந்தித்ததில் மிக்க பெருமை & பெருமிதம். ராஷ்டிரபதி பவனில் வழங்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: Tamilnadu Split : இரண்டாக பிரிகிறதா தமிழ்நாடு? பா.ஜ.க-வின் திட்டம் என்ன!
சத்குரு அவர்கள் சமீபத்தில் மண் காப்போம் இயக்கத்தின் விழிப்புணர்வு பயணத்தில் 30,000 கிலோமீட்டர்கள் தனி நபராக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
அதில் பல நாடுகளின் தலைவர்களையும், இந்திய பிரதமர் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், முக்கிய அமைச்சர்கள், பொதுமக்கள் என அனைவரின் ஆதரவையும மண் காப்போம் இயக்கத்திற்காக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பாஜகவுக்கு தண்ணிகாட்டும் ஹேமந்த் சோரன் -‘ஆபரேஷன் தாமரை’ ஜார்க்கண்டில் வெற்றிபெறுமா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ