அமைச்சருக்கு தரணும்! பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் டாஸ்மார்க் ஊழியர்கள்!

சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது, இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Written by - RK Spark | Last Updated : Sep 20, 2022, 11:00 AM IST
  • சேலத்தில் டாஸ்மாக்கில் கூடுதல் வசூல்.
  • அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என ஊழியர்கள் பதில்.
  • குடிமகன்கள் டாஸ்மாக் முன் குமுறல்.
அமைச்சருக்கு தரணும்! பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் டாஸ்மார்க் ஊழியர்கள்! title=

சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.  இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இயங்கும் டாஸ்மார்க் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கி பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.  ஒவ்வொரு பாட்டிலுக்கும் தலா பத்து ரூபாய் கட்டாயமாக கேட்டு வசூலிக்கும் டாஸ்மார்க் ஊழியர்கள் அதனை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் தருவதற்க்கு வசூலிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுங்கள் - திமுக அரசுக்கு மீனவர்கள் அறிவுரை!

salem

இதனை கண்டித்து மதுபிரியர்கள் திடீரென கடை முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், தினந்தோறும் கூலி வேலைக்கு சென்று ஐநூறு ரூபாய் கூலி பெற்றுக் கொண்டு, அதில் சிறு தொகையை மது அருந்த வந்தால் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் கொடுக்க வேண்டும் கட்டாயப்படுத்துவதாகவும், இதுகுறித்து விளக்கம் கேட்டால் தான் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் தருவதற்காக கட்டாய வசூலிப்பதாகவும் யார் இடம் வேண்டுமென்றாலும் புகார் தெரிவிக்கலாம் எனும் அலட்சியத்துடன் பதில் அளிப்பதாக ஊழியர்கள் மீது குற்றம் சாட்டி உள்ளனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது பிரியர்கள் ஆவேசத்துடன் அன்றாட கூலி வேலை செய்யும் தங்களிடம் தினமும் பத்து ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாகவும் இதே போல சேலத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் ஊழியர்கள் கூடுதல் பணம் வசூலித்து கொள்ளையடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினர்.  எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.  மது பிரியர்களின் இந்த திடீர் வாக்குவாததால் பரபரப்பு ஏற்பட்டது.

salem

மேலும் படிக்க | திமுக கவுன்சிலரின் தலையை வெட்டி ரோட்டில் வீசிய பெண்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News