முதல்வராகிறார் சசிகலா: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அறிவிப்பு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைரவராக சசிகலா தேர்வாகியுள்ளார்.

Last Updated : Feb 5, 2017, 03:32 PM IST
முதல்வராகிறார் சசிகலா: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அறிவிப்பு title=

சென்னை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைரவராக சசிகலா தேர்வாகியுள்ளார்.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 136 எம்எல்ஏக்களும் கலந்துகொண்டனர். இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அதிமுக சட்டப்பேரவைக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார். 

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் பெயரை அதிமுக சட்டப்பேரவைக் குழுவின் தலைவராக முன்மொழிந்தார். இதனை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒரு மனதாக ஆதரித்துள்ளனர்.

 

 

 

Trending News