சீமான் ஒரு பாலியல் குற்றவாளி - விலாசிவிட்ட காங்கிரஸ் எம்பி

சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என்றும், சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 21, 2022, 10:03 PM IST
  • சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.
  • சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை
சீமான் ஒரு பாலியல் குற்றவாளி - விலாசிவிட்ட காங்கிரஸ் எம்பி title=

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக அவரது மகனான ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில், " என் தந்தை நவீன இந்தியாவை உருவாக்கும் கனவு கொண்டவராக வாழ்ந்தார். இரக்கம், கனிவு உள்ளம் கொண்டவராக இருந்தார். எனக்கும் பிரியங்காவுக்கும் சிறப்பான தந்தையாக இருந்தார். அவருடன் வாழ்ந்த காலத்தை நினைந்து பார்க்கிறேன்." எனக் கூறியிருந்தார்.

இதற்கிடையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

 "முன்னாள் பிரதமர் ராஜிவ் என்ன பெரிய தியாகியா? ரூ.400 கோடி பீரங்கி ஊழல் செய்தவர். போபால் விஷவாயு உயிரிழப்புக்கு காரணம் யார்? ஆண்டர்சனை தப்பிக்க வைத்தது யார்? ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார். தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்து விட்டேன் என ராகுல் கூறியுள்ளார். ஆனால், அவர் யார் எங்களை மன்னிக்க? நீங்கள் செய்த கொடுஞ்செயல்களை நாங்கள் மன்னிக்க தயாராக இல்லை." என ஆவேசம் பொங்க பேசியிருந்தார்.

மேலும் படிக்க | 6 ஆண்டுகளுக்குப் பின் ஜாமீனில் விடுதலையான இந்திராணி முகர்ஜி

இவரது இப்பேச்சு இணையத்தில் வைரலானது. அவரது ஆதரவாளர்களால் பகிரப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில், "சீமான் ஒரு பாலியல் குற்றவாளி. சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர், தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன், தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது" என பதிவிட்டுள்ளார்.

 

மேலும் படிக்க | போலி என்கவுண்ட்டர்...விசாரணை ஆணைய அறிக்கையால் ஹைதராபாத் போலீஸாருக்கு சிக்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News